பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மேகாலயாவின் கிழக்கு ஜெயின்ஷியா மலைகளில் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரணத் தொகை அறிவிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 05 FEB 2026 8:36PM by PIB Chennai

மேகாலயாவின் கிழக்கு ஜெயின்ஷியா மலைகளில் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 50,000மும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“மேகாலயாவின் கிழக்கு ஜெயின்ஷியா மலைகளில் ஏற்பட்ட விபத்து குறித்து அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். இந்த விபத்தில் தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களுக்கு, எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரணத் தொகையாகத் தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்: பிரதமர் @narendramodi”

***

(Release ID: 2224096)

AD/BR/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2229282) வருகையாளர் எண்ணிக்கை : 48