தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு 2026-ன் தகவல் ஒலிபரப்பு அமைச்சக அரங்கு, விவாதக் குழுக்கள், அமர்வுகளில் கவனம் செலுத்துகிறது
प्रविष्टि तिथि:
16 FEB 2026 3:40PM by PIB Chennai
புதுதில்லியில் நடைபெறும் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு 2026-ன் தகவல் ஒலிபரப்பு அமைச்சக அரங்கு, விவாதக் குழுக்கள், நிபுணர் வகுப்புகள், தொழில்நுட்ப காட்சிப்படுத்தல், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது. அடோப் நிறுவனத்துடன் இணைந்து செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டுள்ள கதாவதார் எனும் குறும்படங்கள், செயற்கை நுண்ணறிவு உதவியுடன் கதை சொல்லல் குறித்த சேகர் கபூரின் வகுப்பு உள்ளிட்டவை கலந்துரையாடல் நிகழ்வில் முக்கிய இடம்பெறும்.
இந்த கண்காட்சியின் வேவ்ஸ் படைப்பாளர்கள் அரங்கில் இந்தியாவின் ஏவிஜிசி – எக்ஸ்ஆர், ஊடகத் தொழில்நுட்ப துறையில் 51 புத்தொழில் நிறுவனங்களின் புதிய கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்படும். மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் இந்திய நாட்டுப்புறக் கலைகளால் ஈர்க்கப்பட்டு அடோப் நிறுவனம் தயாரித்துள்ள 5 குறும்படங்கள் இந்த உச்சி மாநாட்டில் திரையிடப்படும். கதை சொல்லல் மற்றும் திரைப்படக் கலையில் செயற்கை நுண்ணறிவுடன் புதிய தலைமுறை இந்திய திரைப்பட தயாரிப்பாளர்களின் அனுபவத்தை இந்த குறும்படங்கள் வெளிப்படுத்தும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2228683®=3&lang=1
***
TV/SMB/LDN/SH
(रिलीज़ आईडी: 2228860)
आगंतुक पटल : 54
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Gujarati
,
Telugu
,
Kannada