பிரதமர் அலுவலகம்
சேவா தீர்த்தம் மற்றும் கடமை மாளிகை -1 & 2 கட்டிடங்களை பிப்ரவரி 13-ம் தேதி பிரதமர் திறந்து வைக்கிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
12 FEB 2026 12:02PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி பிப்ரவரி 13, 2026 அன்று பிற்பகல் 1:30 மணியளவில் சேவா தீர்த்தம் என்று பெயரிடப்பட்டுள்ள புதிய கட்டிட வளாகத்தின் பெயர் பலகையை திறந்து வைக்கிறார். பின்னர், சேவா தீர்த்தம் மற்றும் கடமை மாளிகை - 1 & 2 கட்டிடங்களை அவர் முறைப்படி திறந்து வைக்கிறார். மேலும், மாலை 6 மணியளவில் சேவா தீர்த்த வளாகத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சி, இந்தியாவின் நிர்வாக ஆளுகைக்கான கட்டமைப்பில், மாற்றத்தை ஏற்படுத்தும் குறிப்பிடத்தக்க அம்சமாக இருப்பதுடன், நவீன, திறன்வாய்ந்த, பயன்படத்தக்க வகையில், மக்களை மையமாகக் கொண்ட நிர்வாகச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான பிரதமரின் உறுதியான நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.
பல தசாப்தங்களாக, பல்வேறு முக்கிய அரசு அலுவலகங்கள் மற்றும் அமைச்சகங்கள் மத்திய நாடாளுமன்றத் கட்டிடம் அமைந்துள்ளப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்ததுடன், அந்தக் கட்டிடங்களும் பழமையான உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருந்தது. உள்கட்டமைப்பு வசதிகளின் குறைபாடுகள் காரணமாக, செயல்பாட்டு திறமையின்மை, ஒருங்கிணைப்பு சவால்கள், அதிகரித்து வரும் பராமரிப்பு செலவுகள், உகந்த பணிச் சூழல் இல்லாத நிலைக்கு வழிவகுத்தது. புதிய கட்டிட வளாகங்கள் நவீன முறையில், எதிர்காலத்திற்கு ஏற்ப, தேவையான வசதிகளுடன் நிர்வாக செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதன் மூலம் இத்தகைய சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில் அமைந்துள்ளன.
சேவா தீர்த்த வளாகத்தில், பிரதமர் அலுவலகம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம், அமைச்சரவை செயலகம் ஆகியவை அமைந்துள்ளன. இவை அனைத்தும் முன்பு வெவ்வேறு இடங்களில் செயல்பட்டு வந்தன.
கடமை மாளிகை - 1 & 2 ஆகியவை, நிதி அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம், கல்வி அமைச்சகம், கலாச்சார அமைச்சகம், சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம், பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அமைச்சகங்களை உள்ளடக்கியது.
இரண்டு கட்டிட வளாகங்களிலும் டிஜிட்டல் முறையில் ஒருங்கிணைக்கப்பட்ட அலுவலகங்கள், பொது இடைமுக மண்டலங்கள், மையப்படுத்தப்பட்ட வரவேற்பு வசதிகள் உள்ளன. இந்த அம்சங்கள் ஒத்துழைப்பு, செயல்திறன், தடையற்ற நிர்வாகம், மேம்பட்ட குடிமக்கள் ஈடுபாடு, பணியாளர் நல்வாழ்வை மேம்படுத்திட உதவிடும். 4-நட்சத்திர ஒருங்கிணைந்த வாழ்விட மதிப்பீட்டிற்கான பசுமைத் தரநிலை (கிருஹா) என்ற தரநிலைகளின்படி வடிவமைக்கப்பட்ட இந்த வளாகங்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகள், நீர் பாதுகாப்பு அம்சங்கள், கழிவு மேலாண்மை தீர்வுகள் மற்றும் உயர் செயல்திறன் கொண்ட கட்டமைப்பு வசதிகளை உள்ளடக்கியது. இந்த நடவடிக்கைகள் செயல்திறனை மேம்படுத்தும் அதே வேளையில், சுற்றுச்சூழல் தாக்கத்தை கணிசமாகக் குறைக்கின்றன. கட்டிட வளாகங்களில் நவீன கட்டுப்பாட்டு அமைப்புகள், கண்காணிப்பு வலையமைப்புகள், மேம்பட்ட அவசரகால மீட்பு நடவடிக்கைகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் போன்ற விரிவான பாதுகாப்பு சார்ந்த கட்டமைப்புகளும் அடங்கும். இது அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு பாதுகாப்பான, எளிதில் பயன்படுத்தக்கூடிய சூழல் அமைப்பை உறுதி செய்கிறது.
***
(Release ID: 2226845)
VL/IR/RJ/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2227210)
வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam