பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

காலத்தால் அழியாத ஞானத்தை எடுத்துரைக்கும் வேதங்களின் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 12 FEB 2026 10:15AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, காலத்தால் அழியாத ஞானத்தை எடுத்துரைக்கும் வேதங்களின் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

"ऊर्ध्वमूलमधःशाखमश्वत्थं प्राहुरव्ययम्।

छन्दांसि यस्य पर्णानि यस्तं वेद स वेदवित्।।"

"இந்த உலகம் மேலே வேர்களையும் கீழே கிளைகளையும் கொண்ட நிலைத்து நிற்கும் அரச மரத்தைப் போன்றது என்பது ஞானிகளின் கூற்றாக உள்ளது. அதன் இலைகள் வேதங்கள்" என்று சம்ஸ்கிருத சுபாஷிதம் தெரிவிக்கிறது. "இந்த உலக வாழ்வு எனும் மரத்தைப் புரிந்து கொள்பவர்கள் வேதங்களை அறிந்தவர்கள் என்று கூறப்படுகிறது."

அறிவு எனும் தீபம் அறியாமை எனும் இருளை அகற்றுவது மட்டுமின்றி, உலகையும் ஒளிரச் செய்கிறது என்றும், மகரிஷி தயானந்த சரஸ்வதி இதற்கு ஒரு வாழும் உதாரணமாகத் திகழ்கிறார் என்றும் திரு நரேந்திர  மோடி குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

"அறிவு எனும் தீபம் அறியாமை எனும் இருளை அகற்றுவதுடன் மட்டுமின்றி, உலகையும் ஒளிரச் செய்கிறது. மகரிஷி தயானந்த சரஸ்வதியின் தெய்வீக ஆளுமை இதற்கு நேரடி உதாரணமாகத் திகழ்கிறது.

***

(Release ID: 2226761)

VL/IR/RJ/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2227187) வருகையாளர் எண்ணிக்கை : 12