நிதி அமைச்சகம்
தமிழ்நாடு சுற்றுலாவை மேம்படுத்த மத்திய பட்ஜெட்டில் முன்மொழிவுகள்
பழவேற்காடு ஏரி, பொதிகை மலையில் சுற்றுலா மேம்பாட்டிற்கு நடவடிக்கை
இடுகை இடப்பட்ட நாள்:
01 FEB 2026 12:46PM by PIB Chennai
2026-27 நிதிநிலை அறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், தமிழநாட்டில் பழவேற்காடு ஏரி, மேற்கு தொடர்ச்சி மலையை சேர்ந்த பொதிகை மலை உள்ளிட்ட சுற்றுசூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 15 தொல்லியல் தலங்களை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர் ஆற்றிய பட்ஜெட் உரையில், “மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்த, மண்டல அளவில் 5 மருத்துவ மையங்கள் அமைக்க மாநிலங்களுக்கு உதவும் வகையிலான புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது” என்றார். மருத்துவம், கல்வி மற்றும் ஆராய்ச்சி வசதிகலுடன் ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவ வளாகங்களாக இந்த மையங்கள் விளங்கும். ஆயுஷ் மையங்கள், மதிப்புமிக்க மருத்துவ சுற்றுலா மையங்கள், நோய் கண்டறிதல் வசதிகள், சிகிச்சைக்கு பிறகான மறுவாழ்வு வசதிகள் ஆகியவையும் இந்த மருத்துவ மையங்களில் இடம்பெறும்.
தற்போது செயல்பாட்டில் உள்ள தேசிய உணவு விடுதி மேலாண்மை மற்றும் சமையல்கலை தொழில்நுட்பக் கழகத்தை மேம்படுத்தி தேசிய விருந்தோம்பல் நிறுவனமாக மேம்படுத்தபடும். உயர்தரத்திலான 12 வாரப் பயிற்சித் திட்டம் மூலம் 20 முக்கிய சுற்றுலாத் தலங்களில் உள்ள 10,000 வழிகாட்டிகளின் திறன்களை மேம்படுத்துவதற்கான ஒரு முன்னோடித் திட்டம் தொடங்கப்படும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
தமிழ்நாடு மற்றும் ஆந்திரபிரதேசத்தில் அமைந்துள்ள பழவேற்காடு ஏரியில் பறவைகளைப் பார்வையிடும் வசதிகள் ஏற்படுத்துதல், மேற்கு தொடர்ச்சி மலையின் பொதிகை மலை உள்ளிட்ட சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நிதியமைச்சர் தனது உரையில் தெரிவித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், இந்தியா உருவாக்கிய சர்வதேச புலிகள் கூட்டமைப்பின் உச்சிமாநாட்டை இந்த ஆண்டு இந்தியா நடத்த உள்ளது என்றும் திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 15 தொல்லியல் தலங்களை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்; அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடங்களில், பிரத்யேக நடைபாதைகள் அமைக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார். அருணாச்சல பிரதேசம், சிக்கிம், அசாம், மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ள புத்த மதச்சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதற்கான திட்டமும் இந்த நிதிநிலை அறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221403®=3&lang=1
***
VJ/SG/PD/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2221791)
வருகையாளர் எண்ணிக்கை : 77
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
Nepali
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam