நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஐடி சேவைகளுக்கு சட்டப்படியான பாதுகாப்பு சலுகையைப் பெறுவதற்கான வரம்பு 300 கோடி ரூபாயிலிருந்து 2,000 கோடி ரூபாயாக உயர்வு

प्रविष्टि तिथि: 01 FEB 2026 12:57PM by PIB Chennai

தகவல் தொழில்நுட்ப சேவைகளுக்கு சட்டப்படியான பாதுகாப்பு சலுகைகளைப் பெறுவதற்கான வரம்பு ரூ. 300 கோடியிலிருந்து ரூ. 2000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது

மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், தகவல் தொழில்நுட்பத் துறையினருக்குப் பெரும் ஊக்கமளிக்கும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மென்பொருள் மேம்பாடு, ஐடி சார்ந்த சேவைகள்  மற்றும் அறிவுசார் செயல்முறை புற அலுவல் சேவைகள்  போன்ற பல்வேறு பிரிவுகளை இனி 'தகவல் தொழில்நுட்பச் சேவைகள்' என்ற ஒரே குடையின் கீழ் கொண்டு வரவும், அவற்றுக்கு 15.5 சதவீத பொதுவான விளிம்பு நிலையை நிர்ணயிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த வரம்பு மாற்றத்தின் மூலம் அதிகப்படியான நிறுவனங்கள் வரி தொடர்பான சிக்கல்கள் இன்றி எளிதாக வணிகம் செய்ய முடியும். மேலும், இந்தச் சலுகைகளுக்கான அனுமதி இனி அதிகாரிகளின் ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல், தானியங்கி முறையில் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221428&reg=3&lang=1

***

VJ/PKV/VK/SH


(रिलीज़ आईडी: 2221786) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Gujarati , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Odia , Telugu , Kannada , Malayalam