நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நீடித்த பொருளாதார வளர்ச்சி, திறன் கட்டமைப்பு, அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற மூன்று கடமைகளை மத்திய பட்ஜெட் 2026 – 27 நோக்கமாக கொண்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 01 FEB 2026 1:07PM by PIB Chennai

2026 – 27-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசிய திருமதி நிர்மலா சீதாராமன், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்கில் சீர்திருத்த தருணங்களை விரைவுபடுத்துவதற்கு 3 கடமைகளை பரிந்துரைத்தார். உற்பத்தி மற்றும் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கு நீடித்த பொருளாதார வளர்ச்சி என்பது முதலாவது கடமையாகும். மக்களின் விருப்பங்களை நிறைவேற்றி அவர்களுடைய திறனை மேம்படுத்தி வளர்ச்சிக்கான இந்தியாவின் பாதையில் வலிமையான கூட்டாளர்களாக அவர்களை மாற்றுவது இரண்டாவது கடமையாகும். அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற தொலைநோக்கு பார்வையுடன் அர்த்தமுடைய பங்கேற்புக்காக, நிதி, வசதிகள் மற்றும் வாய்ப்புகளை ஒவ்வொரு குடும்பமும், சமூகமும், பிராந்தியமும் பெறுவதை உறுதி செய்வது மூன்றாவது கடமையாகும்.

இந்த மூன்று அணுகுமுறைக்கு ஆதரவான சூழல் தேவை என்று நிதியமைச்சர் கூறினார். கட்டமைப்பு சீர்திருத்தங்களின் தருணத்தை தக்கவைப்பது முதல் தேவையாகும். அதாவது, தொடர்ச்சியான ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் தொலைநோக்குடன் கூடியதாக இது இருக்க வேண்டும். இரண்டாவதாக சேமிப்புகளை திரட்டுவதற்கும், மூலதன திறனை ஒதுக்கீடு செய்வதற்கும், இடர்பாடுகளை எதிர்கொள்வதற்கும், வலுவான மையமாக நிதித்துறை உள்ளது. மூன்றாவதாக செயற்கை நுண்ணறிவு பயன்பாடு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் சிறந்த நிர்வாகத்திற்கு ஒரு ஊக்கசக்தியாக இருக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221452&reg=3&lang=1

***

SG/PKV/IR/RK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2221726) வருகையாளர் எண்ணிக்கை : 82