நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புற்றுநோய்க்கான 17 வகை மருந்துகளுக்கு அடிப்படை சுங்கவரியில் இருந்து விலக்களிக்கப்படவுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 01 FEB 2026 1:01PM by PIB Chennai

2026 – 27-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்து பேசிய மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், ஏற்றுமதி போட்டிதன்மையை ஏற்படுத்தும் வகையில் பரிந்துரைகளை முன்மொழிந்துள்ளார். இது வரிமுறையை மேலும் எலிதாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தனிநபர் பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யபடும் பொருட்களுக்கான  வரியை 20 சதவிகிதத்தில் இருந்து 10 சதவிகிதமாக குறைக்க மத்திய பட்ஜெட் பரிந்துரைத்துள்ளது. நோயாளிகளுக்கு நிவாரணம் அளிக்க, குறிப்பாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 17 வகை மருந்துகளுக்கான அடிப்படை சுங்கவரிக்கு விலக்களிக்க பட்ஜெட் வகை செய்கிறது. நோயாளிகள் தங்களது சிகிச்சையில் பயன்படுத்தும் சிறப்பு மருத்துவ நோக்கங்களுக்கான மருந்துகள் மற்றும் உணவுகளை, தனிப்பட்ட முறையில் இறக்குமதி செய்யும் போதும் அவற்றுக்கு வரிவிலக்கு அளிக்கும் நோய்களின் பட்டியலில் மேலும் 7 அரியவகை நோய்களை சேர்க்கவும் பட்ஜெட் பரிந்துரைத்துள்ளது.

பயணிகளின் சர்வதேசப் பயணத்தின் போது உடைமைகளை விடுவிப்பது தொடர்பான விதிமுறைகளையும் பட்ஜெட்  திருத்தியமைத்துள்ளது. திருத்தியமைக்கப்படும் இந்த விதிமுறைகள் மூலம் பொருட்களை வரியில்லாமல் கொண்டு வர முடியும் அல்லது எடுத்துச்செல்ல முடியும். மேலும் நேர்மையாக வரிச்செலுத்துவோர் தங்களது வரிப்பாக்கிகளை தற்போது செலுத்த இயலும். அபராதம் வாயிலாக கூடுதல் தொகையை செலுத்தி வழக்குகளை முடிக்கவும் இது வகைசெய்யும். சரக்குகளை எளிதாகவும், விரைவாகவும் கொண்டு செல்லவும் மற்றும் சிறந்த வர்த்தகத்திற்காக குறைந்தபட்ச சுங்க நடவடிக்கைகளுக்காக பல்வேறு வழிமுறைகள் பட்ஜெட்டில் அறிவிக்கபட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221439&reg=3&lang=1

***

SG/PKV/IR/RK/SE/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2221669) வருகையாளர் எண்ணிக்கை : 71