பிரதமர் அலுவலகம்
பிரான்ஸ் அதிபரின் வெளியுறவு ஆலோசகர் பிரதமரை சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
13 JAN 2026 10:52PM by PIB Chennai
பிரான்ஸ் அதிபரின் வெளியுறவு ஆலோசகர் திரு இம்மானுவேல் போனே பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:
"அதிபர் மேக்ரோனின் வெளியுறவு ஆலோசகர் இம்மானுவேல் போனேயை சந்தித்ததில் மகிழ்ச்சியடைந்தேன்.
பல தளங்களில் நெருக்கமான ஒத்துழைப்பால் அறியப்பட்ட வலுவான, நம்பகமான இந்தியா- பிரான்ஸ் உத்திசார் கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்தினோம். குறிப்பாக இந்தியா-பிரான்ஸ் புத்தாக்க ஆண்டினைக் குறிக்கும் வேளையில், புத்தாக்கம், தொழில்நுட்பம், கல்வி ஆகியவற்றில் எங்கள் ஒத்துழைப்பு விரிவடைவதைக் காண்பது ஊக்கமளிக்கிறது. முக்கியமான பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்த கண்ணோட்டங்களையும் பரிமாறிக் கொண்டோம். அதிபர் மேக்ரோனை விரைவில் இந்தியாவில் வரவேற்பதை எதிர்நோக்குகிறேன்."
@EmmanuelMacron”
**
(Release ID: 2214359)
TV/SMB/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2220914)
வருகையாளர் எண்ணிக்கை : 37
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam