நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டுத் துறையில் சமூக பாதுகாப்பு பொருளாதார ஆய்வறிக்கை தகவல்

प्रविष्टि तिथि: 29 JAN 2026 1:44PM by PIB Chennai

மத்திய நிதி மற்றும் பெரு நிறுவனங்கள் விவகார துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில், நாட்டின் சமூக பாதுகாப்புத் திட்டங்களின் வளர்ச்சி குறித்து முக்கியத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

ஓய்வூதியத் துறை: இந்தியாவின் ஓய்வூதியத் துறையில் தேசிய ஓய்வூதியத் திட்டம் (என்பிஎஸ்)  மற்றும் அடல் ஒய்வூதிய திட்டம் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. 2025 டிசம்பர் நிலவரப்படி, தேசிய ஓய்வூதிய திட்ட சந்தாதாரர்களின் எண்ணிக்கை 211.7 லட்சமாக உயர்ந்துள்ளது. முறைசாரா தொழிலாளர்கள் மற்றும் கிக்  பணியாளர்களை உள்ளடக்கும் வகையில் 'என்பிஎஸ் இ-ஷ்ராமிக்' (e-Shramik) மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனப் பணியாளர்களுக்கும் ஓய்வூதியப் பாதுகாப்பை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

2047-க்குள் 'அனைவருக்கும் காப்பீடு' என்ற இலக்கை நோக்கி இந்தியா பயணிப்பதாக ஆய்வறிக்கை கூறுகிறது. குறிப்பாக, மோட்டார் வாகனக் காப்பீட்டை விட சுகாதாரக் காப்பீடு 41 சதவீத பங்களிப்புடன் முன்னிலை வகிக்கிறது. காப்பீட்டுத் துறையில் 100 சதவீத நேரடி அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளதும், ஆயுள் மற்றும் தனிநபர் சுகாதாரக் காப்பீட்டிற்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டதும் பாலிசிதாரர்களுக்குப் பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது. நாடு முழுவதும் 22,076 அலுவலகங்கள் மற்றும் 83 லட்சம் விநியோகஸ்தர்கள் மூலம் காப்பீட்டுச் சேவைகள் வழங்கப்படுகின்றன. டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காப்பீட்டுச் செலவுகளைக் குறைக்கவும், எளிதாக்கவும் அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

***

(Release ID: 2219928)

TV/VK/RK


(रिलीज़ आईडी: 2220704) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Punjabi , Kannada , Malayalam