நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வேளாண் இடுபொருள்களின் தரம் அதிகரிப்பு, பண்ணை நடவடிக்கைகளில் எந்திரப் பயன்பாடு, சந்தை வாய்ப்புகள், பயிர்க்காப்பீடு, வேளாண் கடன் போன்ற நடவடிக்கைகள் நேர்மறை தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது – பொருளாதார ஆய்வறிக்கை

प्रविष्टि तिथि: 29 JAN 2026 2:01PM by PIB Chennai

வேளாண் இடுபொருள்களின் தரம் அதிகரிப்பு, பண்ணை நடவடிக்கைகளில் எந்திரப் பயன்பாடு, சந்தை வாய்ப்புகள், பயிர்க்காப்பீடு, வேளாண் கடன் போன்ற நடவடிக்கைகள் நேர்மறை தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் காரணிகளில் அறுவடைக்கு பிந்தைய நடவடிக்கைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று  அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

2025-26-ம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். விதைப்பு மற்றும் நடவுப் பணிகளுக்கான பொருள்களுக்கான துணை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதன் மூலம் உயர் தரத்திலான விதைகள்  விவசாயிகளுக்கு கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் விதை உற்பத்தி ஊக்குவிப்பு, பதப்படுத்தும் நடவடிக்கைகள், சேமிப்பு மற்றும் சான்றளிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 6.85 லட்சம் விதைக்கிராமங்கள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் 1.649.26 லட்சம் குவிண்டால் தரமான விதைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 25.55 கோடிக்கும் அதிகமான மண்வள அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதித்திட்டத்தின் கீழ், 4.09 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி 11 கோடிக்கும் அதிகமான தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 21 தவணைகளாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219954&reg=3&lang=1  

**

TV/SV/KPG/RK


(रिलीज़ आईडी: 2220689) आगंतुक पटल : 111
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali , Punjabi , Gujarati , Kannada , Malayalam