நிதி அமைச்சகம்
நாட்டின் தொழில்துறை செயல்திறன் தொடர்ந்து வலுவாக உள்ளது: பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
प्रविष्टि तिथि:
29 JAN 2026 2:09PM by PIB Chennai
2025-26-ம் நிதியாண்டின் முதல் பாதியில் தொழில்துறை வளர்ச்சி விகிதம் 7 சதவீதமாக இருந்தது எனவும், முந்தைய நிதியாண்டில் இது 5.9 சதவீதமாக இருந்தது எனவும் இந்தியாவின் தொழில்துறை செயல்திறன் வலுவாக உள்ளது என்றும் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று (29.01.2026) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2025-26-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.
இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்பில் நடுத்தர, உயர் தொழில்நுட்ப நடவடிக்கைகள் தற்போது 46.3 சதவீதமாக உள்ளன என்று பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டங்கள், இந்திய செமி கண்டக்டர் இயக்கம் போன்ற பல்வேறு முயற்சிகளால் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. போட்டித்தன்மை வாய்ந்த தொழில்துறை செயல்திறன் அடிப்படையில் இந்தியாவின் தரவரிசை 2022-ல் 40-வது இடத்திலிருந்து 2023-ல் 37-வது இடத்திற்கு உயர்ந்துள்ளதால், அதன் உலகளாவிய நிலை வலுப்பெற்றுள்ளது என்று பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.
முக்கிய தொழில்கள் வலுவான வேகத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன. இந்தியா எஃகு, சிமெண்ட் உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடாகத் தொடர்கிறது என்று பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. இந்தியாவின் நிலக்கரித் தொழில் 2025 நிதியாண்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சத்தை எட்டியது. 1,047.52 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டது. இது முந்தைய ஆண்டை விட 4.98 சதவீதம் அதிகமாகும். ரசாயனம், பெட்ரோ கெமிக்கல்ஸ், வாகனத் துறை, மருந்துத் துறை போன்றவற்றிலும் இந்தியா வலுவான உற்பத்தியைக் கொண்டுள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219990®=3&lang=1
***
(Release ID: 2219990)
TV/PLM/EA
(रिलीज़ आईडी: 2220537)
आगंतुक पटल : 6