நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாறிவரும் கிராமப்புற சூழலுக்கு ஏற்ப வேலைவாய்ப்புகளை உறுதி செய்வதற்கான மறு மதிப்பீடுகள் அவசிமாகிறது – பொருளாதார ஆய்வறிக்கை

இடுகை இடப்பட்ட நாள்: 29 JAN 2026 1:59PM by PIB Chennai

இந்தியாவின் சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்பிற்கு கடந்த 20 ஆண்டுகளாக கிராமப்புற வேலைவாய்ப்பு நடவடிக்கைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளதென்று பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 2025-26-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை இன்று தாக்கல் செய்தார்.

வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப கிராமப்புற வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு இயற்றப்பட்ட மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு மாற்றாக இந்தப் புதியச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் கிராமப்புற வேலைவாய்ப்பில் 2014-ம் நிதியாண்டு முதல் 2025-ம் நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் பெண்களின் பங்கேற்பு 48 சதவீதத்திலிருந்து 58.1 சதவீதமாக அதிகரித்துள்ளது என பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219946&reg=3&lang=1

**

TV/SV/KPG/SE/EA


(வெளியீட்டு அடையாள எண்: 2220452) வருகையாளர் எண்ணிக்கை : 22
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam