நிதி அமைச்சகம்
2025-26 பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்
प्रविष्टि तिथि:
29 JAN 2026 2:18PM by PIB Chennai
முதலாவது முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி, நிதியாண்டு 26 - க்கான உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.4% ஆகவும், மொத்த மதிப்பு கூட்டல் வளர்ச்சி 7.3% ஆகவும் இருக்கும்.
இந்தியாவின் சாத்தியமான வளர்ச்சி சுமார் 7% ஆக மதிப்பிடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் நிதியாண்டு 27-க்கான உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.8-7.2% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் வருவாய், நிதியாண்டு 25-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.2% ஆக உயர்ந்துள்ளன.
2025 செப்டம்பரில் மொத்த வாராக்கடன்கள் பல தசாப்த காலங்களை விட குறைவாக, 2.2%-ஐ எட்டியது
பிரதமரின் ஜன்தன் திட்டத்தின் கீழ், மார்ச் 2025 நிலவரப்படி, 55.02 கோடி வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டன, இவற்றில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறம் சார்ந்த பகுதிகளில் 36.63 கோடி கணக்குகள் திறக்கப்பட்டன
2025 செப்டம்பரில் தனித்துவமான முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 12 கோடியை தாண்டியது, இதில் கிட்டத்தட்ட 25% பேர், பெண்கள்.
2005 மற்றும் 2024-க்கு இடையில் உலகளாவிய வணிக ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 1% முதல் 1.8% வரை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது
சேவைகள் ஏற்றுமதி நிதியாண்டு 25-ல் 387.6 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டி, 13.6% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது
நிதியாண்டு 25-ல் 135.4 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ள முதலீடுகளுடன், உலகின் மிகப்பெரிய வெளிநாட்டு பணத்தைப் பெறும் நாடாக இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது
2026 ஜனவரி 16 நிலவரப்படி, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 701.4 பில்லியன் அமெரிக்க டாலராகப் பதிவானது. இது 11 மாதங்களுக்கான இறக்குமதி செலவினங்களை ஈடுகட்டக்கூடியதாகவும், நாட்டின் மொத்த வெளிநாட்டுக் கடனின் 94% அளவுக்கு சமமானதாகவும் உள்ளது.
2025 ஏப்ரல்-டிசம்பர் வரை உள்நாட்டு பணவீக்கம் சராசரியாக 1.7% ஆக இருந்தது
2024–25 வேளாண் ஆண்டில், இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 3577.3 லட்சம் மெட்ரிக் டன்களை எட்டியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது முந்தைய ஆண்டை விட 254.3 லட்சம் மெட்ரிக் டன் அதிகமாகும்.
பிரதமரின் விவசாயி கவுரவிப்பு நிதித் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து தகுதியான விவசாயிகளுக்கு சுமார் 4.09 லட்சம் கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார இயக்கம் என்பது வளர்ச்சியடைந்த பாரதம் 2047-ன் நீண்டகால தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய கிராமப்புற வேலைவாய்ப்புகளை மேம்படுத்தும் ஒரு விரிவான சட்டப்பூர்வ மறுசீரமைப்பு ஆகும்.
2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.72% மற்றும் இரண்டாவது காலாண்டில் 9.13% வளர்ச்சியடைந்த உற்பத்தியின் மொத்த மதிப்பு கூட்டல், கட்டமைப்பு மீட்சியைப் பிரதிபலிக்கிறது.
14 துறைகளில் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டங்கள் 2.0 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளன. 2025 செப்டம்பர் நிலவரப்படி, ரூ. 18.7 லட்சம் கோடிக்கு அதிகமான உற்பத்தி/விற்பனை மற்றும் 12.6 லட்சத்திற்கும் அதிகமான வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்திய செமி கண்டக்டர் இயக்கம், சுமார் ரூ.1.60 லட்சம் கோடி முதலீட்டில் 10 திட்டங்களுடன் மேம்பட்ட உள்நாட்டு திறன்களைக் கொண்டுள்ளது.
550 கி.மீ (நிதியாண்டு 14) முதல் 5,364 கி.மீ (நிதியாண்டு 26, டிசம்பர் 2025 வரை) வரை அதிவேக ரயில்வே வழித்தடங்கள் கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகரித்துள்ளன; நிதியாண்டு 26-ல் 3,500 கி.மீ ரயில்வே பாதை சேர்க்கப்பட்டது.
உலகின் மூன்றாவது பெரிய உள்நாட்டு விமானச் சந்தையாக விளங்கும் இந்தியா, 2014-ல் 74 ஆக இருந்த விமான நிலையங்களின் எண்ணிக்கை 2025 -ல் 164 ஆக அதிகரித்துள்ளது.
மின் விநியோக நிறுவனங்களுக்கான வரலாற்று சிறப்புமிக்க வருவாய்; 2025 நிதியாண்டில் முதல் முறையாக ரூ.2,701 கோடி லாபத்தைப் பதிவு செய்துள்ளது.
ஒட்டுமொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நிறுவப்பட்ட சூரிய சக்தி திறனில் இந்தியா உலகளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
விண்வெளியில் செயற்கைக்கோள்களை இணைக்கும் செயற்கைக்கோள் டாக்கிங் (ஸ்பேடெக்ஸ்) திறனை கொண்ட நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளது
தொடக்க நிலை, மேல் தொடக்க நிலை மற்றும் இடைநிலைகளில் மொத்த சேர்க்கை விகிதம் முறையே 90.9, 90.3 மற்றும் 78.7 ஆக உள்ளது.
இந்தியாவில் இப்போது 23 ஐஐடிகள், 21 ஐஐஎம்கள் மற்றும் 20 எய்ம்ஸ்கள் இயங்குகின்றன, அவற்றுடன் சான்சிபார் மற்றும் அபுதாபியில் இரண்டு சர்வதேச ஐஐடி வளாகங்களும் நிறுவப்பட்டுள்ளன.
உலகளாவிய சராசரியைக் கடந்து 1990 முதல் தாய் மற்றும் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை இந்தியா வேகமாகக் குறைத்துள்ளது
ஜனவரி 2026 நிலவரப்படி, இ-ஷ்ரம் தளத்தில் 31 கோடிக்கும் மேற்பட்ட முறைசாரா தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர், இவர்களில் 54% பேர், பெண்கள்.
தேசிய வேலைவாய்ப்பு சேவைத் தளத்தில் பதிவு செய்யப்பட்ட வேலைவாய்ப்புகள், நிதியாண்டு 25-ல் 2.8 கோடியைத் தாண்டியுள்ளன. நிதியாண்டு 26 செப்டம்பர் மாதத்திற்குள் 2.3 கோடியை ஏற்கனவே கடந்துள்ளன.
நித்தி ஆயோக் அளவிட்ட பல பரிமாண வறுமைக் குறியீடு, 2005-06-ல் பதிவான 55.3% என்பதிலிருந்து, 2022-23-ல் 11.28% ஆகக் குறைந்துள்ளது.
உத்திசார் மீள்தன்மைக்காக ஒழுங்கமைக்கப்பட்ட தற்சார்பை ஆய்வறிக்கை முன்மொழிகிறது: முக்கியமான திறன்களை உருவாக்கும், உற்பத்தி செலவுகளைக் குறைக்கும், மேம்பட்ட உற்பத்தியை வலுப்படுத்தும் மற்றும் தற்சார்பிலிருந்து உத்திசார் இன்றியமையாமைக்கு முன்னேறும் மூன்று-நிலையிலான உத்திகளை இந்த ஆய்வறிக்கை முன்வைக்கிறது.
2025-26-ம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதித்துறை மற்றும்பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.
இந்த பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
பொருளாதார நிலை
- உலக அளவில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழல் இருந்த போதிலும் நாட்டின் வளர்ச்சி விகிதம், எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் சிறப்பாக இருந்தபோதிலும் புவிசார் அரசியலில் நிலவி வரும் பதற்றமான சூழல் காரணமாக வர்த்தகம் மற்றும் நிதிசார் நடவடிக்கைகளில் பாதிப்புகள் இருந்தன. பொருளாதார வளர்ச்சியில் இதன் தாக்கம் இருந்து வருகிறது.
- இந்த பின்னணியில் இந்தியாவின் செயல்பாடுகள் சிறப்பாக அமைந்திருந்தது. 2026-ம் நிதியாண்டுக்கான உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7.4 சதவீதமாக இருக்கும் என்று முதல்கட்ட கணிப்புகள் உள்ளன. தொடர்ந்து 4-வது ஆண்டாக விரைவான பொருளாதார வளர்ச்சிக் கண்டு இந்தியா தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது.
- 2026-ம் நிதியாண்டில் தனியார் இறுதி நுகர்வுக்கான செலவினங்கள் 7 சதவீதம் அதிகரித்து, 2012-ம் நிதியாண்டுக்கு பிறகு உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 61.5 சதவீதமாக இருந்தது. (2023-ம் நிதியாண்டில் 61.5 சதவீதமாக பதிவாகியுள்ளது). இந்த வளர்ச்சிக்கு குறைவான பணவீக்க விகிதம் நிலையான வேலைவாய்ப்பு மற்றும் அதிகரித்துள்ள மக்களின் வாங்கும் சக்தி ஆகியவை முக்கிய காரணிகளாக உள்ளன. வலுவான வேளாண் செயல்பாடுகள், கிராமப்புற நுகர்வு அதிகரிப்பதற்கும் வரி சீர்த்திருத்த நடவடிக்கைகள் நகர்ப்புற நுகர்வை அதிகரிப்பதற்கும் உதவிடும் வகையில் அமைந்திருந்தன. அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் தேவைகளை அதிகரித்து பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது.
- 2026-ம் நிதியாண்டில் முதலீடுகளுக்கான நடவடிக்கைகள் வலுவடைந்துள்ளன. உள்நாட்டு மொத்த உற்பத்தியில் நிகர நிலையான மூலதனம் 7.8 சதவீதமாகவும் எஞ்சிய முதலீடுகள் 30 சதவீதமாகவும் இருந்தன. நிலையான பொது மூலதன செலவினங்கள் மற்றும் தனியார் முதலீட்டு நடவடிக்கைகளுக்கான மறுமலர்ச்சித் திட்டங்கள் வளர்ச்சி அடைந்ததற்கு பெருநிறுவனங்களுக்கான சீர்திருத்த நடவடிக்கைகள் முக்கிய காரணியாக இருந்தன.
- விநியோக நடைமுறைகளில் சேவைத்துறை வளர்ச்சிக்கான முக்கிய காரணியாக அமைந்திருந்தது. 2026-ம் நிதியாண்டின் முதலாவது அரையாண்டில் சேவைத்துறையின் மொத்த கூட்டு மதிப்பு 9.3 சதவீதமாகவும் ஒட்டுமொத்த ஆண்டின் வளர்ச்சி விகிதம் 9.1 சதவீதமாகவும் இருந்தது. இது சேவைத்துறையில் மேற்கொள்ளப்பட்ட விரிவாக்க நடவடிக்கைகளை எடுத்துக் காட்டும் வகையில் உள்ளது.
நிதிசார் மேம்பாடு: நம்பிக்கை சார்ந்த செயல்பாடுகள் மூலம் நிலையான வளர்ச்சி
- இந்தியாவில் பெரிய அளவிலான பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் நிதிசார் கட்டமைப்புகள் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் அரசின் நிதி மேலாண்மை நடவடிக்கைகள் நம்பகத்தன்மையை வலுப்படுத்தும் வகையில் அமைந்திருந்தன. 2025-ம் ஆண்டில் மார்னிங் ஸ்டார் தரமதிப்பீட்டு நிறுவனம், எஸ்என்பி குளோபர் நிறுவனம் மற்றும் ஆர் & ஐ தரமதிப்பீட்டு நிறுவனம் ஆகிய 3 முக்கிய தரநிலை மதிப்பீட்டு நிறுவங்களின் தரமதிப்பீடுகள் மேம்பட்டிருந்தன.
- 2016-ம் நிதியாண்டு முதல் 2020-ம் நிதியாண்டு வரை உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 8.5 சதவீதமாக இருந்த மத்திய அரசின் வருவாய் வரவுகள், வலுவடைந்து 2025-ம் நிதியாண்டின் 9.2 சதவீதமாக உயர்ந்தது. இது நிறுவனங்கள் அல்லாத வரி வசூல் அதிகரித்திருப்பதே முக்கிய காரணமாகும். பெருந்தொற்று பாதிப்புக்கு முந்தைய உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 2.4 சதவீதமாக இருந்த வருவாய் வரவினங்கள் பெருந்தொற்றுக்கு பிந்தைய சூழலில் 3.3 சதவீதமாக அதிகரித்திருந்தது.
- நேரடி வரிகளுக்கான அடிப்படை அம்சங்கள், நிலையான முறையில் விரிவாக்கம் செய்யப்பட்டதன் காரணமாக 2022-ம் நிதியாண்டில் 6.9 கோடி என்ற எண்ணிக்கையிலிருந்த வருமான வரி அறிக்கைகள் 2025-ம் நிதியாண்டில் 9.2 கோடியாக அதிகரித்தது. வருமான வரி அறிக்கையின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இணக்கமான நடைமுறைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதை எடுத்துக் காட்டும் வகையிலும், வரி நிர்வாக நடைமுறைகளின் தொழில்நுட்பப் பயன்பாடு அதிகரித்திருப்பதும் முக்கிய காரணமாகும். தனிநபர்களின் வருவாய் அதிகரித்துள்ளதன் மூலம் பலர் வரிகட்டமைப்பின் கீழ், வந்துள்ளதன் மூலமும் இந்த எண்ணிக்கை அதிகரிக்க காரணியாக அமைந்தது.
- மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் 2025-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 17.4 லட்சம் கோடி ரூபாயாக பதிவானது. இது ஆண்டுதோறும் 6.7 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஜிஎஸ்டி வருவாய் அதிகரிப்பதற்கு உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதம் அதிகரிப்பதற்கான சூழல் அமைந்துள்ளதே இதற்குக் காரணமாகும். அதே சமயம் வர்த்தக நடவடிக்கைகள் உயர் அளவை எட்டுவதற்கு ஒட்டுமொத்த மின்வழிச் சீட்டு பயன்பாடுகள் அதிகரித்துள்ளதே காரணமாக அமைந்துள்ளது. 2025-ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், வர்த்தக நடவடிக்கைகைளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 21 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
- பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.7 சதவீதமாக இருந்த சராசரி மத்திய அரசின் மூலதன செலவினங்கள் பெருந்தொற்றுக்கு பிந்தைய காலத்தில் 3.9 சதவீதமாக அதிகரித்து 2025-ம் நிதியாண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 4 சதவீதம் என்ற உயர் அளவை எட்டியது.
- மூலதனச் செலவினங்களுக்காக மாநிலங்களுக்கு சிறப்பு நிதியுதவி அளிப்பதன் மூலம் மாநில அரசுகள் மூலதனச் செலவினங்களை ஊக்குவிக்க மத்திய அரசு உதவியது. இதன் மூலம் 2022-ம் நிதியாண்டில் மாநிலங்களின் மூலதனச் செலவினங்களுக்கான ஊக்கத்தொகையாக 2.4 சதவீத பங்களிப்பை மத்திய அரசு வழங்கியது.
- பெருந்தொற்றுக்கு பிந்தைய காலத்தில் மாநிலங்களின் ஒட்டுமொத்த நிதிப்பற்றாக்குறை உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 2.8 சதவீதமாக நிலை நிறுத்தப்பட்டிருந்தது. இது பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்த நிலையை ஒத்திருந்தது. 2025-ம் நிதியாண்டில் மாநில அரசுகளின் நிதிசார்ந்த அழுத்தங்கள் அதிகரித்ததன் காரணமாக நிதிப்பற்றாக்குறை 3.2 சதவீதமாக இருந்தது.
- உள்நாட்டு மொத்த உற்பத்தி – கடன் விகிதம் 2020-ம் ஆண்டிலிருந்து 7.1 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. பொதுத்துறை முதலீடுகள் அதிகரித்த போதிலும் மத்திய அரசு இதே சதவீதத்தை தொடர்ந்து பராமரித்து வந்தது.
பண மேலாண்மை மற்றும் நிதிசார் நடவடிக்கைகள்: ஒழுங்குமுறை நடவடிக்கைகளில் சீர்திருத்தங்கள்
நிதிசார் நடவடிக்கைகள்
- இந்தியாவின் பணபரிவர்த்தனைகள் மற்றும் நிதித்துறையின் செயல்பாடுகள், 2026-ம் நிதியாண்டில் (2025 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை) உத்திசார் கொள்கைகள் மற்றும் மீள்தன்மை கொண்ட கட்டமைப்பு நடவடிக்கைகள் இத்துறையின் வளர்ச்சிக்கு உதவின.
வங்கித்துறையின் செயல்பாடுகள்
- ஷெட்யூல்டு வர்த்தக வங்கிகளின் செயல்பாடுகள் குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சிக் கண்டுள்ளன. இந்த வங்கிகளின் மொத்த வராக்கடன் விகிதம் 2025 செப்டம்பர் மாதத்தில் 2.2 ஆக இருந்தது. இதே காலத்தில் நிகர வராக்கடன் விகிதம் 0.5 சதவீதமாக இருந்தது. இது பல தசாப்த காலத்தில் மிகக் குறைந்த அளவு என்பது குறிப்பிடத்தக்கது.
- 2025 டிசம்பர் 31-ம் தேதி அன்று ஷெட்யூல்டு வர்த்தக வங்கிகளின் கடன் நிலுவைத் தொகை ஆண்டுதோறும் 14.5 சதவீதமாக உயர்ந்தது இது 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 11.2 சதவீதமாக இருந்தது.
நிதிசார் உள்ளடக்கம்
- 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரதமரின் ஜன்தன் வங்கிக் கணக்குத் திட்டத்தின் மூலம் 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை 55.02 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன. இதில் கிராமப்புற மற்றும் சிறுநகர்ப்புற பகுதிகளில் 36.63 கோடி வங்கிக் கணக்குகளும் அடங்கும். வங்கிக் கணக்கு அல்லாத மக்களுக்கு உள்கட்டமைப்பு நடவடிக்கைகள் மற்றும் அடிப்படை நிலையிலான சேமிப்புத் திட்டத்தை உருவாக்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
- பசுமைத் துறை சார்ந்த நிறுவனங்களில் பெண் தொழில் முனைவோர்கள் எஸ்சிஎஸ்டி பிரிவினருக்கு ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் மூலம் 10 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை வங்கிக் கடன் வழங்கப்பட்டது.
- பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான தற்சார்பு நிதித்திட்டத்தின் கீழ், பிணையில்லாத வர்த்தக மூலதன கடன் வழங்கப்பட்டது.
- பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ், உற்பத்தி, வர்த்தகம், சேவைகள் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. 2025-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை இத்திட்டத்தின் கீழ், 55.45 கோடி கடன் கணக்குகள் மூலம் 36.18 லட்சம் கோடி ரூபாய் வரை கடனுதவி வழங்கப்பட்டது.
இதர நிதித்துறை நடவடிக்கைகள்
- 2026-ம் நிதியாண்டில் (2025 டிசம்பர் வரை) 235 லட்சம் டிமேட் (பங்கு பரிவர்த்தனைக் கணக்குகள்) தொடங்கப்பட்டன. இதன் மூலம் டிமேட் கணக்குகளின் மொத்த எண்ணிக்கை 21.6 கோடியாக அதிகரித்தது. 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முக்கிய நடவடிக்கையாக தனித்துவ முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 12 கோடியைக் கடந்து சாதனை படைத்தது. இதில், நான்கில் ஒரு பங்கு எண்ணிக்கை பெண்கள் பெயரில் தொடங்கப்பட்டதாகும்.
- பரஸ்பர நிதித்துறையின் செயல்பாடுகளும் விரிவடைந்தன. 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் இறுதியில் 5.9 கோடி முதலீட்டாளர்கள் பரஸ்பர நிதி தொடர்பான சேவைகளில் இணைந்திருந்தனர். இந்த எண்ணிக்கை 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை 3.5 கோடியாக இருந்தது. 2-வது மற்றும் 3-ம் நிலை நகரங்களில் வழக்கமான நகர்ப்புற மையங்களைக் காட்டிலும் நிதிசார் பங்களிப்புகள் அதிக எண்ணிக்கையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவின் முதலாவது சர்வதேச நிதிச்சேவைகள் மையம் குஜராத் மாநிலம் கிஃப்ட் நகரில் தொடங்கப்பட்டது. இது உலக அளவில் உள்ள முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் இருந்தது.
துறைசார் கண்ணோட்டம்
11. ஒழுங்குமுறைத் தரத்தில் ஏற்பட்ட அமைப்புரீதியான உயர்வு, 2025-ம் ஆண்டில் சர்வதேச செலாவணி நிதியமும், உலக வங்கியும் இணைந்து நடத்திய நிதித்துறை மதிப்பீட்டின் மூலமாக, சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இது, மீட்சித்திறன் கொண்ட, பன்முகப்படுத்தப்பட்ட, அனைவரையும் உள்ளடக்கிய நிதி அமைப்பை எடுத்துக் காட்டியது. 2024-ம் ஆண்டில் மொத்த நிதித்துறைச் சொத்துக்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 187 சதவீதமாக இருந்தன. மூலதனச் சந்தைகள் 2017-ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 144 சதவீதமாக இருந்த நிலையில் 2024-ம் ஆண்டில் 175 சதவீதமாக விரிவடைந்தன. கடுமையான அழுத்தங்கள் நிறைந்த சூழல் நிலவியபோதும் வங்கி சார்ந்த, வங்கி சாரா நிதி நிறுவனங்கள் போதுமான மூலதனப் பாதுகாப்பைக் கொண்டுள்ளதாக மதிப்பீடுகளில் தெரியவந்துள்ளது.
வெளிநாட்டு வர்த்தகம் - நீண்டகால இலக்கை நோக்கிய பயணம்
1. 2005 - 2024-ம் ஆண்டுகளுக்கு இடையில், உலகளாவிய சரக்கு ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு கிட்டத்தட்ட இருமடங்காக, அதாவது s1 சதவீதத்திலிருந்து 1.8 சதவீதமாக அதிகரித்தது. அதே நேரத்தில், உலகளாவிய சேவை ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு இருமடங்கிற்கும் மேலாக, அதாவது 2 சதவீதத்திலிருந்து 4.3 சதவீதமாக உயர்ந்தது.
2. ஐக்கிய நாடுகளின் வர்த்தக மேம்பாட்டு கூட்டமைப்பின் 2025-ம் ஆண்டு அறிக்கைப்படி, வர்த்தக பன்முகச் சூழலில் இந்தியா முன்னணிப் பொருளாதாரங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது. இதில் இந்தியா உலகளாவிய தென்பகுதி நாடுகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. அத்தேடன், உலகளாவிய வடபகுதி நாடுகளில் அனைத்துப் பொருளாதாரங்களையும் விட அதிக வர்த்தகப் பன்முகத்தன்மை மதிப்பெண்ணைக் கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்தது.
3. 2025-ம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 825.3 பில்லியன் அமெரிக்க டாலராக சாதனை அளவை எட்டியது. சேவை ஏற்றுமதியில் வலுவான வளர்ச்சி காணப்பட்டது. அதில் 6.1 சதவீத ஆண்டு வளர்ச்சி ஏற்பட்டது.
4. 2025-ம் நிதியாண்டில் பெட்ரோலியம் அல்லாத பொருட்களின் ஏற்றுமதி 374.3 பில்லியன் அமெரிக்க டாலராக ஒரு வரலாற்று உச்சத்தை எட்டியது.
5. 2025-ம் நிதியாண்டில் சேவை ஏற்றுமதி 387.6 பில்லியன் அமெரிக்க டாலராக ஒரு வரலாற்று உச்சத்தைத் தொட்டது. இது 13.6 சதவீத வளர்ச்சி ஆகும். இது தொழில்நுட்ப, வணிகச் சேவைகளுக்கான உலகளாவிய மையமாக இந்தியாவின் நிலையை வலுப்படுத்தியுள்ளது.
6. இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மிதமான அளவில் இருந்தது. சரக்கு வர்த்தகப் பற்றாக்குறையை, சேவை ஏற்றுமதிகள், அந்நியச் செலாவணிப் பணவரவுகள் ஆகியவை ஈடுசெய்தன. 2026-ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 1.3 சதவீதமாக இருந்த இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, மற்ற பல முக்கியப் பொருளாதாரங்களுடன் ஒப்பிடும்போது குறைவாகவே இருந்தது.
7. இந்தியா, 2025-ம் நிதியாண்டில் 135.4 பில்லியன் அமெரிக்க டாலர் அந்நியச் செலாவணி வரவுடன், உலகிலேயே மிகப்பெரிய அளவில் வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணத்தைப் பெறும் நாடாகத் தொடர்ந்து திகழ்ந்தது. இது ஸ்திரத்தன்மையை அதிரித்தது. மேம்பட்ட பொருளாதார நாடுகளில் இருந்து வரும் பணம் அதிகரித்தது. இது திறமையான, தொழில்முறை ஊழியர்களின் சிறந்த பங்களிப்பைப் பிரதிபலிக்கிறது.
8. இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு 2026 ஜனவரி 16, நிலவரப்படி 701.4 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தது. இது சுமார் 11 மாத இறக்குமதிக்கு போதுமானதாக இருந்ததுடன், வெளிநாட்டுக் கடனில் 94 சதவீதத்திற்கும் மேலானதை ஈடுசெய்தது. இதன் மூலம், சர்வதேச ஏற்ற இறக்கங்களுக்கு எதிரான மீட்சித்திறன் வலுவடைந்தது.
9. மந்தமான உலகளாவிய முதலீட்டுச் சூழலுக்கு மத்தியில், இந்தியா தொடர்ந்து கணிசமான அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்தது. ஏப்ரல்-நவம்பர் 2025 காலகட்டத்தில் மொத்த அந்நிய நேரடி முதலீடு 64.7 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது.
10. 2024-ல் புதிய திட்ட முதலீட்டு அறிவிப்புகளில் இந்தியா உலக அளவில் நான்காவது இடத்தைப் பிடித்தது. 1,000-க்கும் மேற்பட்ட முதலீட்டுத் திட்டங்களுடன், 2020-24 காலகட்டத்தில் புதிய டிஜிட்டல் முதலீடுகளுக்கான மிகப்பெரிய மையமாக இந்தியா உருவெடுத்தது.
பணவீக்கம்: கட்டுப்படுத்தப்பட்டது
1. நுகர்வோர் விலைக் குறியீட்டுத் தொடர் தொடங்கப்பட்டதில் இருந்து இந்தியா மிகக் குறைந்த பணவீக்க விகிதத்தைப் பதிவு செய்தது. ஏப்ரல்-டிசம்பர் 2025 காலகட்டத்தின் சராசரி மொத்தப் பணவீக்கம் 1.7% ஆக இருந்தது. சில்லறைப் பணவீக்கத்தில் ஏற்பட்ட இந்த மிதமான தன்மைக்கு, உணவு, எரிபொருள் விலைகளில் ஏற்பட்ட பணவீக்கக் குறைவே காரணமாகும். இவை இரண்டும் சேர்த்து இந்தியாவின் நுகர்வோர் விலைக் குறியீட்டுத் தொகுப்பில் 52.7 சதவீதத்தைக் கொண்டுள்ளன.
2. வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளைப் பொருத்தவரை இந்தியாவில் 2024-ம் ஆண்டை விட 2025-ம் ஆண்டில் மொத்தப் பணவீக்கம் சுமார் 1.8 சதவீதப் புள்ளிகள் என்ற மிகக் குறைவாகப் பதிவானது.
வேளாண்மை, உணவு மேலாண்மை
1. 2015-ம் நிதியாண்டுக்கும் 2024-ம் நிதியாண்டுக்கும் இடையில், கால்நடைத் துறை வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது; அதன் மொத்த வளர்ச்சி கிட்டத்தட்ட 195 சதவீதம் உயர்ந்துள்ளது. மீன்வளத் துறையும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. 2004-2014 காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 2014-2024 காலகட்டத்தில் மீன் உற்பத்தி 140 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
2. நல்ல பருவமழையின் காரணமாக, 2024-25-ம் வேளாண் ஆண்டில் இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 3,577.3 லட்சம் மெட்ரிக் டன்களாக இருந்தது. இது முந்தைய ஆண்டை விட 254.3 லட்சம் மெட்ரிக் டன் அதிகமாகும். இந்த வளர்ச்சிக்கு அரிசி, கோதுமை, மக்காச்சோளம், சிறுதானியங்களின் ஆகியவற்றின் கூடுதல் உற்பத்தி முக்கியக் காரணமாகும்.
3 தோட்டக்கலைத் துறை, வேளாண் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய உந்துசக்தியாக உருவெடுத்தது. 2024-25-ம் ஆண்டில், தோட்டக்கலை உற்பத்தி 362.08 மில்லியன் டன்களை எட்டியது.
4. வேளாண் சந்தைப்படுத்தல், வேளாண் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் செயல்திறனை மேம்படுத்த, வேளாண் சந்தைப்படுத்தல் உள்கட்டமைப்பு துணைத் திட்டம், வேளாண் உள்கட்டமைப்பு நிதித் திட்டம் ஆகியவற்றை அரசு செயல்படுத்தி வருகிறது. இ-நாம் எனப்படும் மின்னணு வேளாண் சந்தைத் திட்டம் மூலம் விலை நிர்ணயம் மேம்படுத்தப்பட்டுள்ளது. 31 டிசம்பர் 2025 நிலவரப்படி, இந்தத் திட்டத்தில் 23 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 1,522 மண்டிகளில், சுமார் 1.79 கோடி விவசாயிகள், 2.72 கோடி வர்த்தகர்கள், 4,698 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (FPOs) இணைக்கப்பட்டுள்ளனர்.
5. முக்கியமான பயிர் உற்பத்திகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுகிறது. பிரதமரின் விவசாயி கெளரவிப்பு நிதி மூலம் விவசாயிகளுக்கு உதவி வழங்கப்படுகிறது. பிரதமரின் விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் ஓய்வூதிய ஆதரவு வழங்ப்பட்டு, விவசாயிகளின் வருமானப் பாதுகாப்பும் சமூகப் பாதுகாப்பும் வலுப்படுத்தப்படுகிறது. பிரதமரின் விவசாயி கெளரவிப்பு நிதித் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, தகுதியுள்ள விவசாயிகளுக்கு 21 தவணைகளில் 4.09 லட்சம் கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான பிரதமரின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், 31 டிசம்பர் 2025 நிலவரப்படி 24.92 லட்சம் விவசாயிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
சேவைகள்:
நிலைத்தன்மையிலிருந்து புதிய தளங்களுக்கு
- நிதியாண்டு 2026-ன் முதல் அரையாண்டில் சேவைகளின் பங்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி)யில் 53.6 சதவீதத்திற்கு உயர்ந்தது. நிதியாண்டு 26-ன் முதலாவது முன்கூட்டிய மதிப்பீட்டின் படி, ஒட்டுமொத்த மதிப்புக்கூடுதலில் சேவைகளின் பங்கு எப்போதும் இல்லாத மிக உயர்ந்த அளவான 56.4 சதவீதமாக இருந்தது. நவீன, வர்த்தகத்திற்குரிய, டிஜிட்டல் மயமான சேவைகள் வழங்குவது அதிகரித்திருப்பதை இது காட்டுகிறது.
- சேவைகள் ஏற்றுமதியில் உலகின் ஏழாவது பெரிய ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது. உலகளாவிய சேவைகள் வர்த்தகத்தில் 2005-ல் 2 சதவீதமாக இருந்த இந்தியாவின் பங்கு 2024-ல் 4.3 சதவீதமாக இருமடங்கு அதிகரித்துள்ளது.
- வெளிநாட்டு நேரடி முதலீட்டு வரவிலும், சேவைகள் துறை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்தில் (நிதியாண்டு 16 முதல் நிதியாண்டு 20 வரை) காலத்தில் 77.7 சதவீதம் என்பதிலிருந்து நிதியாண்டு 23 முதல் நிதியாண்டு 25 வரையிலான காலத்தில் மொத்த வெளிநாட்டு நேரடி முதலீடு சராசரி 80.2 சதவீதமாக அதிகரித்தது.
தொழில்துறையின் அடுத்த பாய்ச்சல்: கட்டமைப்பு மாற்றமும், உலகளாவிய ஒருங்கிணைப்பும்
- உலக அளவில் நிச்சயமற்ற தன்மை இருந்தபோதும், நிதியாண்டு 26-ல் முதலாவது அரையாண்டில் தொழில்துறையின் ஒட்டுமொத்த மதிப்புக் கூடுதல் 7 சதவீதமாக இருந்ததையடுத்து அதன் செயல்பாடு வலுவடைந்துள்ளது.
- ஒட்டுமொத்த மதிப்புக்கூடுதல், நிதியாண்டு 26-ன் முதல் காலாண்டில் 7.72 சதவீதமாகவும், இரண்டாவது காலாண்டில் 9.13 சதவீதமாகவும், விரிவடைந்து உற்பத்தித் துறையில் வளர்ச்சி வேகமடைந்துள்ளது. இது கட்டமைப்பு மீட்சியை பிரதிபலிக்கிறது.
- 14 துறைகளில் உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டங்கள் 2.0 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளது. இதனால் 18.7 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான உற்பத்தி / விற்பனை நடந்துள்ளது. 2025 செப்டம்பர் நிலவரப்படி 12.6 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
- இந்தியாவின் புத்தாக்க செயல்பாடு சீராக வலுவடைந்துள்ளது. உலகளாவிய புத்தாக்க குறியீட்டு தரவரிசையில் இந்தியா 2019-ல் 66 என்பதிலிருந்து 2025-ல் 38 என்ற இடத்திற்கு முன்னேறியுள்ளது.
- இந்திய செமிகண்டக்டர் இயக்கம் உள்நாட்டில் முன்னேற்றம் அடைந்துள்ளது. 1.60 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் 7 மாநிலங்களில் 10 செமிகண்டக்டர் உற்பத்தி மற்றும் பேகேஜிங் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முதலீடும், உள்கட்டமைப்பும்: போக்குவரத்து தொடர்பு, திறன் மற்றும் போட்டித்தன்மையை வலுப்டுத்துதல்
- மத்திய அரசின் மூலதனச் செலவு சுமார் 4.2 மடங்கு அதிகரித்துள்ளது. நிதியாண்டு 18-ல் 2.63 லட்சம் கோடி ரூபாயாகவும், நிதியாண்டு 26-ல் (பட்ஜெட் மதிப்பீடு) 11.21 லட்சம் கோடி ரூபாயாகவும், திருத்தப்பட்ட மதிப்பீடு 15.48 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது. இது உள்கட்டமைப்பு துறையின் முக்கிய வளர்ச்சியை பிரதிபலிக்கிறது.
- தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. நிதியாண்டு 14-ல் 91,287 கி.மீ என்பதிலிருந்து நிதியாணடு 26-ல் 1,46,572 கி.மீ என நெடுஞ்சாலை அமைப்பு 60 சதவீதம் அதிகரித்துள்ளது. நிதியாண்டு 14-ல் 550 கி.மீ ஆக இருந்த செயல்பாட்டில் உள்ள அதிவேக வழித்தட அளவு நிதியாண்டு 26 டிசம்பர் வரை 5,364 கி.மீ என சுமார் 10 மடங்கு அதிகரித்துள்ளது.
- ரயில்வே உள்கட்டமைப்பு தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. மார்ச் 2025 நிலவரப்படி 69,439 கி.மீ ஆக இருந்த ரயில்வே நெட்வொர்க்கில் நிதியாண்டு 26-ல் 3,500 கி.மீ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2025 வாக்கில் 99.1 சதவீத மின்மயம் எட்டப்பட்டுள்ளது.
- உள்நாட்டு விமான போக்குவரத்து துறையில் உலகின் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. 2014-ல் 74 ஆக இருந்த விமான நிலையங்களின் எண்ணிக்கை 2025-ல் 164 ஆக உயர்ந்துள்ளது.
- மின்சாரத்துறை நீடித்த திறன் விரிவாக்கத்தை பதிவு செய்துள்ளது. சென்ற ஆண்டை விட 11.6 சதவீதம் நிறுவு திறன் அதிகரித்து நவம்பர் 2025-ல் 509.74 ஜிகாவாட் ஆக உள்ளது. தேவை-விநியோகம் இடையேயான இடைவெளி நிதியாண்டு 14-ல் 4.2 சதவீதம் என்பதிலிருந்து நவம்பர் 25-ல் பூஜ்ஜியமாக மாறியுள்ளது.
- மின்சாரத்துறை சீர்திருத்தங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க பயன்களை கண்டுள்ளன. முதல்முறையாக நாட்டில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் நிதியாண்டு 25-ல் முதல் முறையாக 2,701 கோடி ரூபாய் வரிக்குப் பிந்தைய லாபத்தை ஈட்டியுள்ளது. நிதியாண்டு 14-ல் 22.62 சதவீதமாக இருந்த தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்புகள் நிதியாண்டு 25-ல் 15.04 சதவீதமாக குறைந்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி நவம்பர் 2025 நிலவரப்படி மொத்த மின் உற்பத்தியில் 49.83 சதவீதமாக இருந்தது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நிறுவப்பட்ட சூரிய மின்சக்தியின் உலகளாவிய தரவரசையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
- தொலைத் தகவல் தொடர்பு 86.76 சதவீதத்தை எட்டியுள்ளது. நாட்டில் 99.9 சதவீத மாவட்டங்களில் இப்போது 5-ஜி சேவைகள் கிடைக்கின்றன.
- 2025 அக்டோபர் நிலவரப்படி ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ், 81 சதவீதத்திற்கும் அதிகமான கிராமப்புற வீடுகள் தூய்மையான குடிநீர் குழாய் இணைப்பைப் பெற்றுள்ளன
- விண்வெளி கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. சுயேச்சையான செயற்கைக்கோள் நிறுவு தளத்தை அடைவதில் இந்தியா நான்காவது நாடாக மாறியுள்ளது. இத்துடன் உள்நாட்டுப் பயணங்களை விரிவுபடுத்தியிருப்பதோடு தனியார் துறை பங்கேற்பையும் அதிகரித்துள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம்: மீள்தன்மை, போட்டித்தன்மை மற்றும் மேம்பாட்டு கட்டமைப்பால் இயக்கப்படும் இந்தியா
- 2025-26 காலத்தில் (2025 டிசம்பர் 31 வரை) நாட்டில் மொத்தம் 38.61 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் நிறுவப்பட்டுள்ளது. இதில், 30.16 ஜிகாவாட் சூரிய மின்சக்தி, 4.47 ஜிகாவாட் காற்றாலையின் சக்தி, 0.03 ஜிகாவாட் பயோபவர் 3.24 ஜிகாவாட் புனல் மின்சாரம் ஆகியவை அடங்கும்.
கல்வியும், சுகாதாரமும்: என்ன நடந்துள்ளது, அடுத்து என்ன
- உலகின் மிகப்பெரிய பள்ளிக்கல்வி முறையைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. 14.71 லட்சம் பள்ளிகளில் 1.01 கோடி ஆசிரியர்கள் ஆதரவுடன் 24.69 கோடி மாணவர்கள் பயில்கின்றனர். (யுடிஐஎஸ்இ+2024-25)
- உள்கட்டமைப்பும், ஆசிரியர் திறனும் வலுப்பெற்றிருப்பதால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் இந்தியா குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்தியுள்ளது. போஷன் சக்தி நிர்மாண், அனைவருக்கும் கல்வி இயக்கம் போன்ற திட்டங்கள், எளிதாக கல்வி கிடைப்பதையும், சமத்துவத்தையும் ஊக்குவித்து வருகின்றன. மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் என்பது தொடக்க நிலையில் (வகுப்பு 1 முதல் 5) 90.90 ஆகவும், இடைநிலையில் (வகுப்பு 6 முதல் 8) 90.3 ஆகவும் உயர்நிலையில் (வகுப்பு 9 மற்றும் 10) மேல்நிலையில் (வகுப்பு 11 மற்றும் 12) 58.4 ஆகவும் உள்ளது.
உயர்கல்வி
- 2014-15-ல் 51,534 ஆக இருந்த உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை ஜூன் 2025 நிலவரப்படி 70,018 ஆக அதிகரித்துள்ளது. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் கணிசமான வளர்ச்சியை இது குறிக்கிறது. முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையும், 2014-15 மற்றும் 2024-25-க்கு இடையே கணிசமாக உயர்ந்துள்ளது. இதன்படி, 23 ஐஐடிகள், 21 ஐஐஎம்கள், 20 எய்ம்ஸ் ஆகியவை உள்ளன. ஜான்சிபார், அபுதாபி ஆகியவற்றில் இரண்டு சர்வதேச ஐஐடி வளாகங்கள் நிறுவப்பட்டுள்ளன.
- தேசிய கல்விக் கொள்கையின் கீழ், உயர்கல்வி முறையில் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
- தேசிய மதிப்பீட்டு கட்டமைப்பு என்பது கல்வித்துறையையும், திறன் அடிப்படையிலான கற்பித்தலையும் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நடைமுறை 170 பல்கலைக்கழகங்களால் ஏற்கப்பட்டுள்ளது.
- தகுதிக்கான கல்வி நிலை வங்கி 2660 கல்வி நிறுவனங்களில் உள்ளன. இதன் மூலம் 4.6 கோடி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், தானியங்கி நிரந்தர கல்வி கணக்குப் பதிவேடு (ஏபிஏஏஆர்) உருவாக்க அடையாள அட்டைகளும் அடங்கும்.
- 2035-க்குள் ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தை 50 சதவீத அளவுக்கு உயர்த்துவது என்ற தேசிய கல்விக் கொள்கையின் இலக்கை எட்டும் நோக்கத்துடன் 153 பல்கலைக்கழகங்கள் எப்போதும் சேரலாம்-விலகலாம் என்ற வழிமுறையையும் ஆண்டுக்கு இருமுறையிலான மாணவர் சேர்க்கையையும் அறிமுகம் செய்துள்ளன.
சுகாதாரம்
5. 1990-ம் ஆண்டில் இருந்து இந்தியா மகப்பேறு இறப்பு விகிதத்தை 86 சதவிகிதம் குறைத்துள்ளது. இது உலகளாவிய சராசரியான 48 சதவிகிதத்தை விட அதிகமாகும். 1990 – 2023-ம் ஆண்டுகளுக்கிடையே ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 78 சதவிகிதம் குறைந்துள்ளது. இது உலக அளவிலான 61 சதவிகிதத்தை கடந்துள்ளது. சிசு இறப்புகளின் விகிதம் உலக அளவில் 54 சதவிகிதம் குறைந்த நிலையில் இந்தியாவில் 70 சதவிகிதம் குறைந்துள்ளது.
6. கடந்த 10 ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் 37 சதவிகிதத்திற்கு மேல் குறைந்துள்ளது. 2013-ம் ஆண்டில் 1000 குழந்தைகளுக்கு 40 பிறந்த குழந்தை இறப்பு என்ற எண்ணிக்கை இருந்த நிலையில் 2023-ம் ஆண்டு அது 25-ஆக குறைந்தது.
வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு: திறன் பயிற்சியை சரியாக பெறுதல்
- 2026-ம் நிதியாண்டின் 2-வது காலாண்டில் 56.2 கோடி பேர் (15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோர்) வேலை வாய்ப்பை பெற்றனர். 2026-ம் நிதியாண்டில் முதலாவது காலாண்டுடன் ஒப்பிடும் போது இரண்டாவது காலாண்டில் சுமார் 8.7 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதை பிரதிபலிக்கிறது.
- அமைப்பு சார் உற்பத்தி துறையை உள்ளடக்கிய தொழில் துறையின் 2024-ம் நிதியாண்டின் கணக்கெடுப்பு முடிவுகள் உற்பத்தி துறையின் மீள் திறனை எடுத்துக்காட்டுகிறது. இது முந்தைய ஆண்டை விட வேலைவாய்ப்பில் ஆண்டுதோறும் 6 சதவிகித வளர்ச்சியை காட்டுகிறது. இதன் மூலம் 2023-ம் நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 2024-ம் நிதியாண்டில் கூடுதலாக 10 லட்சத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
- தொழிலாளர் விதிகள் இணையவழி மற்றும் நடைபாதை தொழிலாளர்களை முறையாக அங்கீகரித்து, சமூக பாதுகாப்பு, நலநிதி, பலன்கள் பரிமாற்றம் ஆகியவற்றை விரிவுபடுத்தியுள்ளது.
- 2026 ஜனவரி வரை இ-ஷ்ரம் தளத்தில் 31 கோடிக்கும் அதிகமான அமைப்புசாரா தொழிலாளர்கள் வெற்றிகரமாக பதிவு செய்துள்ளனர்; பதிவு செய்தவர்களில் 54 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் ஆவர், இது பாலின நலத்திட்டங்கள் சென்றடைவதை வலுப்படுத்துகிறது.
- தேசிய வேலைவாய்ப்பு சேவை என்பது வேலை தேடுவோர், வேலை வழங்குவோர், பதிவு செய்த 59 மில்லியனுக்கும் அதிகமான வேலை தேடுவோருக்கு பயிற்சி வழங்குவோர், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 5.3 மில்லியன் வேலை வழங்குவோர் மற்றும் சுமார் 80 மில்லியன் காலிப்பணியிடங்களை ஒருங்கிணைக்கும் ஒரு முழுமையான தீர்வாகும்.
திறன் மேம்பாட்டு சூழல்
- இது நவீன வகுப்பறைகள், ஆய்வகங்கள், டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் தொழில்துறை சார்ந்த நீண்டகால மற்றும் குறுகிய கால படிப்புகள் மூலம் 200 முக்கிய ஐடிஐ-க்கள், 800 துணை ஐடிஐ-க்கள் உட்பட 1000 அரசு ஐடிஐ-க்களை மேம்படுத்துவதற்கான தேசிய திட்டமாகும்.
ஊரக மேம்பாடு மற்றும் சமூக வளர்ச்சி: பங்கேற்பில் இருந்து கூட்டாண்மை வரை
- உலக வங்கி வறுமைக்கோட்டை நாள் ஒன்றுக்கு 2.15 டாலரில் இருந்து 3.00 டாலராக உயர்த்தியுள்ளது. இது 2021-ம் ஆண்டு விலைகளுக்கு ஏற்ப பணத்தின் வாங்கும் சக்திக்கு சரி செய்யப்பட்டுள்ளது. திருத்தியமைக்கப்பட்ட சர்வதேச வறுமை கோட்டின்படி, இந்தியாவில் வறுமை விகிதங்கள் 2022 – 23-ம் ஆண்டில் தீவிர வறுமைக்கு 5.3 சதவிகிதமாகவும், கீழ் நடுத்தர வருவாய் கொண்ட வறுமைக்கு 23.9 சதவிகிதமாகவும் இருந்தன.
- அரசுகளின் பொது சமூக சேவைகள் செலவினம் 2022-ம் நிதியாண்டு முதல் வளர்ச்சியடையும் சாத்தியக்கூறை காட்டியுள்ளது.
- சமூக சேவைகள் செலவினம் 2023-24-ம் ஆண்டில் 7 சதவிகிதமாக இருந்த நிலையில் 2024 – 25-ம் ஆண்டில் (திருத்தப்பட்ட மதிப்பீடு) 7.7 சதவிகிதமாக இருந்த நிலையில் 2025 – 26-ம் நிதியாண்டில் (பட்ஜெட் மதிப்பீடு) மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 7.9 சதவிகிதமாக உள்ளது.
ஊரக பொருளாதார நிலை
- ஸ்வமிதா திட்டத்தின் கீழ் சுமார் 3.44 லட்சம் கிராமங்களில் ட்ரோன் கணக்கெடுப்பு செய்வது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில் 2025 டிசம்பர் வரை 3.28 லட்சம் கிராமங்களில் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. சுமார் 1.82 லட்சம் கிராமங்களுக்கு 2.76 கோடி சொத்து அட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. 2023 - 24-ம் ஆண்டில் முன்னணி உர நிறுவனங்கள் தங்களது சொந்த நிதியின் மூலம் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த ட்ரோன் சகோதரிகளுக்கு 1094 ட்ரோன்கள் வழங்கியது. இவற்றில் 500 ட்ரோன்கள் நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது.
இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு சூழலின் பரிணாம வளர்ச்சி: முன்னேற்றத்தை நோக்கி
அனைத்து துறைகளில் பயன்படுத்தப்படும் சிறிய, குறிப்பிட்ட பணிகளுக்கான மாதிரிகள் புதிய கண்டுபிடிப்புகளை மேலும் சீராக பரவலாக்கவும், நிறுவனங்களுக்கான நுழைவு தடைகளை குறைக்கவும் இந்தியாவின் பொருளாதார சூழலின் பன்முக தன்மைக்கு சிறப்பாக பொருந்த அனுமதிக்கின்றன. இந்தியாவின் செயற்கை நுண்ணறிவுக்கான தேவை யூகங்கள் அடிப்படையிலான பயன்பாடுகளில் இருந்து அல்லாமல், நிகழ் நேர பிரச்சனைகள் மூலம் உருவாகின்றன. சுகாதாரம், வேளாண்மை, நகர்ப்புற மேலாண்மை, கல்வி, பேரிடர் தயார் நிலை மற்றும் பொது நிர்வாகத்தில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட வன்பொருளில் இயங்கும் மற்றும் குறைந்த வளங்களில் செயல்படும் செயற்கை நுண்ணறிவு அமைப்புகளுக்கான ஆர்வம் அதிகரிக்கிறது.
நகர்ப்புறமயமாக்கல்: இந்திய நகரங்களின் பணியை அதன் குடிமக்களுக்காக செயல்படுத்துதல்
நமோ பாரத் பிராந்திய விரைவு போக்குவரத்து முறை, அதிவேக பிராந்திய போக்குவரத்து இணைப்பு எவ்வாறு நகர்ப்புற மற்றும் புறநகர் தொழிலாளர் சந்தைகள் மறுவடிவமைக்க முடியும் என்பதை விளக்குகிறது. நகரங்களுக்கும் அதையொட்டிய பிராந்தியங்களுக்கும் இடையேயான பயண நேரங்களை வெகுவாக குறைப்பதன் மூலம் இத்தகைய முறை வேலைகளுக்கான அணுகலை விரிவுப்படுத்துகின்றன, முக்கிய வளர்ச்சியை ஆதரிக்கின்றன, முக்கிய பெருநகரங்கள் மீதான அழுத்தத்தை குறைக்கின்றன.
இறக்குமதி சார்பு நிலையில் இருந்து உத்திசார் நெகிழ்வு தன்மை மற்றும் அத்தியாவசிய பங்களிப்புகள்
- சுதேசி என்பது ஒழுங்கமைக்கப்பட்ட உத்திசார்ந்ததாக அவசியம் இருக்க வேண்டும். ஏனென்றால் அனைத்து இறக்குமதி சார்புகளும் சாத்தியமானவை அல்லது விரும்பத்தக்கது அல்ல. அதிக உத்திசார் நெருக்கடி, உத்திசார்ந்த பலன்களுடன் பொருளாதார ரீதியாக சாத்தியமிக்க திறன்கள் மற்றும் குறைந்த உத்திசார் நெருக்கடி அல்லது அதிக விலைமாற்று ஆகியவற்றுடன் முக்கியமான பாதிப்புகளை வேறுபடுத்தும் மூன்றடக்கு கட்டமைப்பு மூலம் சுதேசி மயமாக்களுக்கான ஒழுங்கமைக்கப்பட்ட அணுகுமுறை அளிக்கப்படுகிறது.
- போட்டித்தன்மையை உள்கட்டமைப்பாக கருதக்கூடிய ஒரு தேசிய உள்ளீட்டு செலவு குறைப்பு உத்தி குறைந்த விலையான மற்றும் நம்பதகுந்த உள்ளீடுகளை அங்கீகரிக்கிறது.
- இறக்குமதி சார்ந்திருப்பதை குறைக்கும் வகையில், சுதேசி எனப்படும் உள்ளூர் தயாரிப்புகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வலுசேர்ப்பதுடன் உலக அளவிலான வர்த்தக நடைமுறைகளுடன் போட்டியிடவும் உதவுகிறது. சர்வதேச அளவில் தர நிலையை உறுதி செய்யும் போது இந்திய தயாரிப்புகளை வாங்குவதற்கான மனநிலையை உலக நாடுகளிடையே அதிகரிக்க செய்யவும் இத்தகைய நடவடிக்கைகள் வகை செய்கிறது.
***
(Release ID: 2219907)
TV/RB/SV/PLM/SMB/IR/KPG/RJ/RK/EA
(रिलीज़ आईडी: 2220420)
आगंतुक पटल : 21