பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உற்சாகம், தேசியப் பெருமையுடன் கொண்டாடப்பட்ட குடியரசு தின விழாவிற்குப் பிரதமர் பாராட்டு

கடமைப் பாதையில் நடைபெற்ற பிரம்மாண்டமான குடியரசு தின அணிவகுப்பின் காட்சிகளைப் பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்

குடியரசு தின விழாவில், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் திரு அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத் தலைவர் திருமதி உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றத்தில் இந்தியா பெருமை கொள்கிறது: பிரதமர்

प्रविष्टि तिथि: 26 JAN 2026 4:50PM by PIB Chennai

குடியரசு தினத்தை மிகுந்த உற்சாகத்துடனும், பெருமையுடனும் இந்தியா கொண்டாடியதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கடமைப் பாதையில் நடைபெற்ற பிரம்மாண்டமான அணிவகுப்பு, இந்திய ஜனநாயக நடைமுறைகளின் வலிமை, அதன் வளமான பாரம்பரியம், தேசத்தை ஒன்றிணைக்கும் ஒருமைப்பாடு போன்ற மாண்புகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்ததாக அவர் எடுத்துரைத்துள்ளார். குடியரசு தின விழாக் கொண்டாட்டங்களின் காட்சிகளைப் பகிர்ந்துகொண்ட அவர், கடமைப் பாதையில் நடைபெற்ற  அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள், நாட்டின் பெருமையை பறைசாற்றும் அற்புதமான காட்சியாக இருந்தது என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.

குடியரசு தினக் கொண்டாட்டங்களின்போது, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் திரு அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத் தலைவர் திருமதி உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றத்தில், இந்தியா பெருமை கொள்வதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இது, இந்திய - ஐரோப்பிய யூனியன் இடையேயான ஒத்துழைப்பின் வலுவான பிணைப்பையும், பகிரப்பட்ட விழுமியங்களுக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். அவர்களது பங்கேற்பு, இந்திய - ஐரோப்பிய நாடுகளிடையே பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவதற்கான ஈடுபாடு மற்றும் ஒத்துழைப்பிற்கு மேலும் உத்வேகம் அளிக்கும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

குடியரசு தின அணிவகுப்பு, இந்தியாவின் வலுவான பாதுகாப்பு கட்டமைப்பை வெளிப்படுத்தியது என்றும், இது நாட்டின் தயார்நிலை, தொழில்நுட்பத் திறன் மற்றும் நாட்டு மக்களைப் பாதுகாப்பதில் உள்ள உறுதியான அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பிரதிபலிப்பதாக உள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

குடியரசு தின அணிவகுப்பு, நாட்டில் உள்ள பாதுகாப்புப் படையினரின்   திறன்கள் குறித்த ஒரு தொலைநோக்குப் பார்வையை வழங்கியது என்று திரு மோடி கூறினார். பாதுகாப்புப் படையினர், நாட்டின் பெருமை என்று புகழாரம் சூட்டிய அவர், அணிவகுப்பின் போது, அவர்களது தீர்க்கமான செயல்பாடுகளை எடுத்துக்காட்டும் காட்சிகளைப் பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

குடியரசு தின கொண்டாட்டங்களின் போது, கடமைப் பாதையில் நாட்டின் கலாச்சாரப் பன்முகத்தன்மையை பறைசாற்றும் அற்புதமான காட்சியாக அமைந்திருந்தது என்று அவர் கூறினார். இந்த அணிவகுப்பில், உற்சாகமான கண்கவர் நிகழ்ச்சிகள், அலங்கார ஊர்திகள், இந்தியாவின் கலாச்சாரப் பன்முகத்தன்மையைப் போற்றும் வகையில் இருந்தது என்றும், இது நாட்டின் வளமை மற்றும் மாறுபட்ட பாரம்பரியத்தைப் பிரதிபலிப்பபதாக இருந்தது என்றும் திரு மோடி குறிப்பிட்டார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள தொடர் பதிவுகளில், பிரதமர் கூறியிருப்பதாவது;

“இந்தியா மிகுந்த உற்சாகத்துடனும், பெருமையுடனும் குடியரசு தினத்தைக் கொண்டாடியது.

கடமைப் பாதையில் நடைபெற்ற அற்புதமான அணிவகுப்பு நமது ஜனநாயகத்தின் வலிமையையும், பாரம்பரியத்தின் செழுமையையும்,  தேசத்தை ஒன்றிணைக்கும் ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்தியது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2218796&reg=3&lang=1

***

TV/SV/RK


(रिलीज़ आईडी: 2218831) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam