தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
குடியரசு தின அணிவகுப்பில் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் அலங்கார ஊர்தி இந்தியாவின் கதை சொல்லும் மரபையும் வேவ்ஸ் தொலைநோக்குப் பார்வையையும் வெளிப்படுத்தியது
प्रविष्टि तिथि:
26 JAN 2026 4:04PM by PIB Chennai
கடமைப் பாதையில் இன்று நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் அலங்கார ஊர்திகள் இடம்பெற்றன. அவற்றில் "பாரத் கதா: ஸ்ருதி, கிருதி, த்ரிஷ்டி" என்ற தலைப்பிலான அலங்கார ஊர்தி, இந்தியாவின் வளமான கதை சொல்லும் மரபை வெளிப்படுத்தியது. பண்டைய வாய்மொழி மரபுகளிலிருந்து சமகால ஊடகங்கள் மற்றும் சினிமா வரையிலான அதன் பயணத்தைக் கண்டறிந்து, நாட்டின் கலாச்சார பரிணாமத்தையும் உலகளாவிய உள்ளடக்க சக்தியாக உருவெடுப்பதையும் அது பிரதிபலித்தது.
77-வது குடியரசு தின அணிவகுப்பின் போது, மரபுகள் மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள கருத்துகளை உயிரோட்டமாகக் கொண்டு வர, நாகரிக பாரம்பரியத்தை நவீன தொழில்நுட்பத்துடன் தடையின்றி இணைத்த அதே நேரத்தில், இந்தியாவின் ஊடக மற்றும் பொழுதுபோக்குத் தலைமைத்துவம், புத்தாக்கம் மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் உலகளாவிய தளமாக வேவ்ஸ் முன்னேறுவதையும் இந்த ஊர்தி எடுத்துக்காட்டியது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2218779®=3&lang=1
***
TV/SMB/RK
(रिलीज़ आईडी: 2218807)
आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam