உள்துறை அமைச்சகம்
பேரிடர் மேலாண்மை துறையில் சிறந்த சேவையாற்றியவர்களுக்கு ஆப்த பிரபந்தன் விருதுகள் வழங்கப்படுகிறது
प्रविष्टि तिथि:
23 JAN 2026 9:07AM by PIB Chennai
இந்தியாவில் பேரிடர் மேலாண்மை துறையில் சிறந்த மற்றும் தன்னலமற்ற சேவையாற்றிய தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை அங்கீகரிக்கும் வகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசு சுபாஷ் சந்திர போஸ் ஆப்ட பிரபந்தன் விருதுகள் வழங்கப்படுகின்றன.
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் வழிகாட்டுதலின் பேரில் பேரிடர் மேலாண்மை நடைமுறைகள், தயார்நிலை, தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை மேம்படுத்தி உள்ளது. இதன் விளைவாக இயற்கை பேரிடரால் ஏற்படும் உயிரிழப்புகள் கணிசமாகக் குறைந்துள்ளன. ஆண்டுதோறும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினமான ஜனவரி 23-ம் தேதி இந்த விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.
2026-ம் ஆண்டுக்கான விருதுகள் கடந்த ஆண்டு (2025) மே மாதம் 1-ம் தேதி முதல் பரிந்துரைகள் கோரப்பட்டன. இது குறித்து அனைத்து ஊடகங்களிலும் விளம்பரம் செய்யப்பட்டு தனிநபர்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து 271 பரிந்துரைகள் பெறப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2217527®=3&lang=1
---
AD/SV/KPG/PD
(रिलीज़ आईडी: 2217691)
आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
Telugu
,
Malayalam
,
English
,
Urdu
,
Nepali
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Kannada