பிரதமர் அலுவலகம்
மணிப்பூர் மாநிலத்தின் நிறுவன தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
21 JAN 2026 9:24AM by PIB Chennai
மணிப்பூர் மாநிலத்தின் நிறுவன தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (21 ஜனவரி, 2026) அம்மாநில சகோதர சகோதரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநில மக்களின் அர்ப்பணிப்புணர்வு, கடின உழைப்பின் மூலம், இந்தியாவின் முன்னேற்றத்திற்கு வளம் சேர்க்கிறார்கள் என்று பிரதமர் கூறியுள்ளார். விளையாட்டின் மீதான மாநில மக்களின் ஆர்வம், வளமான கலாச்சார பாரம்பரியம், இயற்கையுடனான நெருங்கிய பிணைப்பு ஆகியவை குறிப்பிடத்தக்கவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரும் காலங்களில் மணிப்பூர் மாநிலம் வளர்ச்சிப் பாதையில், சீராக முன்னேறிச் செல்லும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், வெளியிட்டுள்ள பதிவில் பிரதமர் திரு நரேந்திர மோடி மோடி கூறியுள்ளதாவது;
“மணிப்பூர் மாநில நிறுவன தினத்தை முன்னிட்டு, அம்மாநிலத்தில் உள்ள சகோதர சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மணிப்பூர் மாநில மக்கள் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு வளம் சேர்க்கின்றனர். விளையாட்டு, கலாச்சாரம், இயற்கை மீதான அம்மாநில மக்களின் ஆர்வம் குறிப்பிடத்தக்கது. வரும் காலங்களில் இந்த மாநிலம் வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து முன்னேறிச் செல்லட்டும்.”
***
(Release ID: 2216658)
AD/SV/PD
(रिलीज़ आईडी: 2216763)
आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam