பிரதமர் அலுவலகம்
சோமநாதர் சுயமரியாதை திருவிழாவின் சிறப்புக் காட்சிகளை பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
11 JAN 2026 10:04PM by PIB Chennai
குஜராத் சோம்நாத்தில் நடைபெற்ற சோமநாதர் சுயமரியாதை திருவிழாவின் சிறப்புக் காட்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி எழுதியிருப்பதாவது:
“சோமநாதர் ஆலயம் புனித தெய்வீகத்தின் அடையாளமாகத் திகழ்கிறது. அதன் புனிதத் தன்மை பல தலைமுறைகளாக மக்களை வழிநடத்துகிறது. ஓம்கார மந்திர உச்சரிப்பு, ட்ரோன் நிகழ்ச்சி உட்பட, நேற்றைய நிகழ்ச்சிகளின் சில முக்கிய காட்சிகள் இங்கே இடம் பெற்றுள்ளன.
சோமநாதபுரத்தில், துணிச்சல்மிக்க வீரர் ஹமீர்ஜி கோஹிலுக்கு மரியாதை செலுத்தினேன். அவர் எதேச்சதிகாரம், வன்முறைக்கு இடையே, வீரம் மற்றும் உறுதியின் அடையாளமாக உயர்ந்து நிற்கிறார். அவரது தைரியம் நமது நாகரீக நினைவுகளில் என்றும் நிலைத்திருக்கும். அசுர பலத்தால் நமது நாகரீகத்தை அழித்துவிடலாம் என்று நம்பியவர்களுக்கு, அவரது வீரத்திலேயே காலத்தால் அழியாத பதில் இடம் பெற்றுள்ளது.
சர்தார் படேல் இல்லையென்றால் தற்போது நாம் காணும் சோமநாதர் ஆலயம் இருந்திருக்காது. 1947-ம் ஆண்டு தீபாவளி நேரத்தில் அவர் மேற்கொண்ட பயணத்தின் விளைவாக, அங்கு ஒரு பிரம்மாண்ட கோவிலை மீண்டும் கட்ட சபதம் மேற்கொண்டார். 1951-ம் ஆண்டு மே மாதம் கோவில் திறக்கப்பட்டபோது, சர்தார் சாஹிப் அங்கு இல்லை, ஆனால் அவருடைய அசைக்க முடியாத மன உறுதியும் தொலைநோக்குப் பார்வையும் இந்தத் தெய்வீகக் கோவில் வளாகத்தில் பிரதிபலிக்கின்றன.
வேக்டாஜி பில்லின் வீரம் சோமநாதரின் வரலாற்றின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாகும். மனிதாபிமானமற்ற வன்முறை அச்சுறுத்தல்களுக்குப் பணிய மறுத்து, அவர் அந்தப் புனிதத் தலத்தைப் பாதுகாப்பதில் உறுதியாக நின்றார். சோமநாதரின் வலிமையானது, இந்த புகழ்பெற்ற கோயிலைப் பாதுகாத்து வந்த பாரதத் தாயின் எண்ணற்ற வாரிசுகளின் உறுதிப்பாட்டிலிருந்தே என்றும் உருவாகியுள்ளது என்பதை நமக்கு விளக்குகிறது.
சோமநாதர் சுயமரியாதை திருவிழா என்பது நம்பிக்கை மற்றும் மன உறுதியைப் பற்றியதாகும். சோமநாத் எண்ணற்ற தியாகங்களின் நினைவுகளைக் கொண்டுள்ளது. அது நம்மைத் தொடர்ந்து ஊக்குவிக்கிறது. இது தெய்வீகம் மற்றும் நாகரிகப் பெருமையைப் பற்றியதாகும். இன்றைய நிகழ்வுகளின் சில காட்சிகளை இதில் காணலாம் .. pic.twitter.com/eA0d6gkYXw
***
(Release ID 2213512)
AD/IR/KPG/PD
(வெளியீட்டு அடையாள எண்: 2216416)
வருகையாளர் எண்ணிக்கை : 32
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam