உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய பேரிடர் மீட்புப்படை உதய தினத்தையொட்டி அப்படை வீரர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 19 JAN 2026 10:40AM by PIB Chennai

தேசிய பேரிடர் மீட்புப்படை உதய தினத்தையொட்டி மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா அப்படை வீரர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா பதிவிட்டிருப்பதாவது:

“தேசிய பேரிடர் மீட்புப்படை உதய தினத்தையொட்டி அப்படை வீரர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.   பேரிடர் மீட்பு இந்தியாவை கட்டமைப்பதற்கான மோடி அரசின் உறுதிப்பாட்டை உணர்ந்து இந்தச் சிறப்பான பணிகள் மூலம் பேரிடர் காலங்களில் நாட்டின் நம்பிக்கைமிக்க தூணாகத் தேசிய பேரிடர் மீட்புப்படை தற்போது திகழ்கிறது. பிறரை பாதுகாக்க தங்களை தியாகம் செய்த வீரர்களுக்கு வணக்கம்”.

----

(Release ID: 2215954)

TV/IR/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2216026) வருகையாளர் எண்ணிக்கை : 54