குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
இளைஞர்கள் ஆரோக்கியத்துடன் இருந்தால் மட்டுமே வளரச்சியடைந்த, தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வையை அடையமுடியும் – குடியரசு துணைத்தலைவர்
प्रविष्टि तिथि:
13 JAN 2026 1:52PM by PIB Chennai
தில்லி பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் இல்லா வளாகம் இயக்கத்தை குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், இளைஞர்களை போதைப்பொருள் உபயோகத்திலிருந்து விடுபடச் செய்யவும் வளர்ச்சியடைந்த மற்றும் தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்கவும் நீடித்த மற்றும் கூட்டுமுயற்சிகளின் அவசியம் குறித்து வலியுறுத்தினார். வலுவான நாடுகளுக்கு தலைமைத்துவம் அவசியம் என வலியுறுத்திய குடியரசு துணைத்தலைவர், பல்கலைக்கழகங்கள் வெறும் கல்வி கற்கும் மையங்களாக மட்டுமின்றி, மாண்புகளை உருவாக்கக் கூடிய, தலைமைப் பண்பை வளர்க்கக் கூடிய மற்றும் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் நிறுவனங்கள் என்று தெரிவித்தார். தில்லி பல்கலைக்கழகம் போன்ற முதன்மை நிறுவனம் போதைப் பொருள் பழக்கத்திற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கும் போது அது முழு சமூகத்திற்கும் வலிமையான செய்தியைக் கூறுகிறது என்று அவர் கூறினார். போதைப்பொருள் இல்லாத வளாக இயக்கத்தின் கீழ், இ-உறுதிமொழி தளம் (https://pledge.du.ac.in/home) மற்றும் மொபைல் செயலியையும் குடியரசு துணைத்தலைவர் தொடங்கி வைத்து போதைப்பொருள் இல்லாத வளாக உறுதி மொழி எடுக்குமாறு நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களையும் வலியுறுத்தினார்.
போதைப் பொருள் இல்லாத வளாக இயக்கம் அனைத்து மத்திய உயர்கல்வி நிறுவனங்களின் ஒரு பகுதியாக இருப்பதை உறுதி செய்யுமாறு மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதானை அவர் கேட்டுக் கொண்டார். இந்தியா ஒரு இளைஞர்கள் மிகுந்த நாடு என்று சுட்டிக்காட்டிய குடியரசு துணைத்தலைவர், போதைப் பொருள் உபயோகம் என்பது தனிநபரின் பிரச்சனையாக மட்டுமின்றி தீவிரமான சமூக சவால் மிக்கது என்றும் மக்களின் சுகாதார நலனுக்கு கேடு விளைவிக்கக் கூடியது என்றும் குறிப்பிட்டார்.
இளைஞர்கள் ஆரோக்கியமுடனும், போதைப் பொருள் இல்லா பழக்கத்துடனும் குறிக்கோளுடன் இருந்தால் மட்டுமே வளர்ச்சியடைந்த மற்றும் தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்க முடியும் என்று குடியரசு துணைத்தலைவர் சி பி ராதாகிருஷணன் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214089®=3&lang=1
***
AD/IR/KPG/PD
(रिलीज़ आईडी: 2214149)
आगंतुक पटल : 10