பிரதமர் அலுவலகம்
வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் மாநாடு 2026-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
புதுமையான யோசனைகள், ஆற்றல் மற்றும் நோக்கத்துடன், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் நாட்டின் இளைஞர் சக்தி முன்னணியில் உள்ளது: பிரதமர்
கடந்த பத்தாண்டுகளில், நாங்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் இப்போது சீர்திருத்த வெளிப்பாடாக மாறியுள்ளன; இந்த சீர்திருத்தங்களின் மையத்தில் நமது இளைஞர் சக்தி உள்ளது: பிரதமர்
प्रविष्टि तिथि:
12 JAN 2026 9:12PM by PIB Chennai
புதுதில்லியில் இன்று (12 ஜனவரி 2026) நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் மாநாடு 2026-ன் நிறைவு அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வில், உரையாற்றிய அவர், இந்திய சுதந்திரத்தின் நூற்றாண்டான 2047 வரையிலான காலம், நாட்டிற்கும் அதன் இளைஞர்களுக்கும் மிக முக்கியமான கட்டமாகும் என்று வலியுறுத்தினார். இளம் இந்தியர்களின் ஆற்றலும், திறன்களும் இந்தியாவின் வலிமையை வடிவமைக்கும் என்றும், அவர்களின் வெற்றி, நாட்டை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும் என்றும் அவர் கூறினார். வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றவர்களை வாழ்த்திய பிரதமர், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை அடைவதில் இளைஞர்களின் தலைமையின் முக்கியப் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
இந்த நிகழ்வு சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளுடன் ஒத்துப்போகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். “சுவாமி விவேகானந்தரை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12-ம் தேதி தேசிய இளைஞர் தினத்தைக் கொண்டாடுகிறோம். அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, ஜனவரி 12-ம் தேதி வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் மாநாட்டிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை, நம் அனைவரையும் வழி நடத்துகிறது” என்று திரு மோடி குறிப்பிட்டார்.
இந்திய இளைஞர்களின் திறன்கள் மீதான தனது நம்பிக்கையை வலியுறுத்திய பிரதமர், இந்த நம்பிக்கை இளம் கண்டுபிடிப்பாளர்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் புதிய மேம்பாட்டு அணுகுமுறைக்கு வழிவகுத்தது என்று கூறினார். ஸ்டார்ட்அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, வணிகம் செய்வதை எளிதாக்குதல் மற்றும் வரி மற்றும் இணக்கத்தை எளிமைப்படுத்துதல் போன்ற முக்கிய சீர்திருத்தங்கள் மற்றும் முன்முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார். இத்தகைய முன்முயற்சிகள், முன்பு அரசின் கட்டுப்பாட்டில் இருந்த துறைகளில் தொழில்முனைவோர் பங்களிக்க வாய்ப்பளித்து, இந்தியாவின் புத்தொழில் நிறுவன புரட்சியை துரிதப்படுத்தியது, என்று பிரதமர் கூறினார்.
புதிய தலைமுறை படைப்பாளர்களை வளர்ப்பதிலும், கலாச்சாரம், உள்ளடக்கம் மற்றும் படைப்பாற்றலை மையமாகக் கொண்ட இந்தியாவின் ஆரஞ்சு (படைப்பாற்றல்) பொருளாதாரத்தின் வளர்ச்சியை இயக்குவதிலும் டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியின் தாக்கத்தை பிரதமர் எடுத்துரைத்தார். "கலாச்சாரம், உள்ளடக்கம் மற்றும் படைப்பாற்றலை உள்ளடக்கிய 'படைப்பாற்றல் பொருளாதாரத்தில்', இந்தியா முன் எப்போதும் இல்லாத வளர்ச்சியைக் காண்கிறது. ஊடகம், திரைப்படம், கேமிங், இசை, டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் வி.ஆர்-எக்ஸ்.ஆர் போன்ற துறைகளில் இந்தியா ஒரு முக்கிய உலகளாவிய மையமாக உருவாகி வருகிறது" என்று திரு மோடி குறிப்பிட்டார். 'உலக ஒலி-ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடான' வேவ்ஸ், இளம் படைப்பாளர்களுக்கான ஒரு முக்கிய தொடக்கத் தளமாக மாறியுள்ளது" என்று அவர் மேலும் கூறினார். அரசின் தொடர்ச்சியான ஆதரவை உறுதிசெய்த பிரதமர், இளைஞர்கள் தங்கள் கருத்துக்களைத் தைரியமாக முன் வைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2213960®=3&lang=1
(Release ID: 2213960)
****
AD/BR/SH
(रिलीज़ आईडी: 2213991)
आगंतुक पटल : 12