பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு நரேந்திர மோடியும் ஜெர்மனி பிரதமர் திரு ஃபிரட்ரிக் மெர்ஸும் அகமதாபாத்தில் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினர்
प्रविष्टि तिथि:
12 JAN 2026 3:50PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜெர்மனி பிரதமர் திரு ஃபிரட்ரிக் மெர்ஸ் இந்தியாவில் 2026 ஜனவரி 12, 13 ஆகிய இரண்டு நாட்கள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டார். அவருடன் ஜெர்மனி நாட்டின் 23 முன்னணி நிறுவன தலைமைச் செயல் அதிகாரிகள், தொழில்துறை தலைவர்கள் உள்ளிட்ட உயர்நிலைக் குழுவும் வந்திருந்தது.
ஜெர்மனி பிரதமராக திரு மெர்ஸினின் முதலாவது ஆசிய மற்றும் இந்தியாவிற்கான அதிகாரப்பூர்வ பயணம் இதுவாகும். இந்தோ - பசிபிக் பிராந்தியத்தின் முக்கிய உத்திசார்ந்த கூட்டாளியாக ஜெர்மனி இருப்பதை இது பிரதிபலிக்கிறது.
புதுதில்லியில் 2024 அக்டோபர் 25 அன்று இந்தியா – ஜெர்மனி அரசுகளுக்கு இடையேயான 7-வது ஆலோசனைக் கூட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து இப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அகமதாபாத்தில் பிரதமர் திரு மெர்ஸியை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றார். சபர்மதி ஆசிரமத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு இரு தலைவர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். பின்னர் புகழ்பெற்ற பட்டம் விடும் திருவிழாவில் பங்கேற்றனர்.
இந்தியா - ஜெர்மனி தலைமை செயல் அதிகாரிகள் கூட்டத்தில் இரு தலைவர்களும் உரையாற்றினார்கள். இந்தியா - ஜெர்மனி இடையே வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பில் இணைந்து செயல்படுவதில் கவனம் செலுத்தும் வகையில் பிரதமர் திரு மெர்ஸ் பெங்களூருக்கும் செல்ல உள்ளார்.
அகமதாபாத்தில் 2026 ஜனவரி 12 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியும், பிரதமர் திரு மெர்ஸ்ஸூம் இருதரப்பு மற்றும் பிரதிநிதிகள் நிலையிலான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.
பகிரப்பட்ட ஜனநாயக மாண்புகள், விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கிற்கான உறுதிப்பாடு, உத்திசார்ந்த கூட்டாண்மையை ஆதரிக்கும் பரஸ்பர புரிதல் ஆகியவற்றை அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினார்கள். இருதரப்பு உறவுகளை இரு தலைவர்களும் ஆய்வுசெய்து பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்து விவாதித்தனர்.
***
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2213744®=3&lang=1
TV/IR/LDN/KR
(रिलीज़ आईडी: 2213820)
आगंतुक पटल : 17