மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
ஆதார் உதய் சின்னம் அறிமுகம்
प्रविष्टि तिथि:
08 JAN 2026 3:06PM by PIB Chennai
ஆதார் சேவைகள் குறித்து பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ஆதார் சின்னத்தை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இன்று அறிமுகப்படுத்தியது. உதய் என்று பெயரிடப்பட்டுள்ள ஆதார் சின்னம், ஆதார் தொடர்பான மேலும் அதிக தகவல்களை மக்களுக்கு உகந்த வகையில் அளிப்பதற்கு உதவிடும். புதுப்பித்தல், அங்கீகாரம் அளித்தல், நேரடி சரிபார்த்தல், புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல் என எதுவாக இருப்பினும் ஆதார் சேவைகள் தொடர்பான தகவல்களை இது எளிமைப்படுத்தும்.
இதற்காக மைகவ் இணையதளத்தில் போட்டிகள் நடத்தப்பட்டது. நாடு முழுவதிலுமிருந்து இதற்காக 875 விண்ணப்பங்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் பெற்றது. இதில் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த திரு அருண் கோகுல் வடிவமைத்த சின்னம் முதல் பரிசை வென்றது. மகாராஷ்டிரா மாநிலம் புனேயைச் சேர்ந்த திரு இத்ரிஸ் தவாய்வாலா இரண்டாம் பரிசையும் உத்தரப்பிரதேசம் மாநிலம் காசிப்பூரைச் சேர்ந்த திரு கிருஷ்ணா சர்மா 3-ம் பரிசையும் வென்றனர்.
சின்னத்திற்கு பெயரிடுதல் போட்டியில் போபாலைச் சேர்ந்த திரு ரியா ஜெயின் முதல் பரிசையும், புனேயைச் சேர்ந்த திரு இத்ரிஸ் தவாய்வாலா இரண்டாம் பரிசையும், ஐதராபாதைச் சேர்ந்த திரு மகராஜ் சரண் செல்லப்பில்லா 3-ம் பரிசையும் வென்றனர்.
ஆதார் சின்ன அறிமுக நிகழ்ச்சியும் போட்டியில் வெற்றிபெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியும் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்திய தனித்துவ அடையாள ஆணையத் தலைவர் திரு நீல்கந்த மிஸ்ரா புதிய ஆதார் சின்னத்தை அறிமுகம் செய்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212405®=3&lang=1
***
AD/IR/KPG/SH
(रिलीज़ आईडी: 2212594)
आगंतुक पटल : 63
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam