பிரதமர் அலுவலகம்
எதிர்காலத் துறைகளில் காக்னிசென்ட் நிறுவனத்தின் பங்களிப்பு: பிரதமர் வரவேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
09 DEC 2025 9:13PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று, காக்னிசென்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு எஸ் ரவி குமார், அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு ராஜேஷ் வர்ரியர் ஆகியோருடன் ஒரு பயனுள்ள சந்திப்பை நடத்தினார்.
இந்தச் சந்திப்பின்போது, இந்தியாவின் எதிர்காலத் துறைகள் சார்ந்த பயணத்தை மேம்படுத்துவதில் காக்னிசென்ட் தொடர் பங்களிப்பதை பிரதமர் வரவேற்றார். மேலும், இந்தியாவின் இளைஞர்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றின் மீது அதிக கவனம் செலுத்தி வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், இது நாட்டின் தொழில்நுட்ப எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு துடிப்பான ஒத்துழைப்புக்கான களத்தை அமைக்கிறது என்று கூறினார்.
இதுகுறித்து காக்னிசென்ட் நிறுவனத்தின் எக்ஸ் பக்கத்தில் இடப்பட்டிருந்த பதிவு ஒன்றுக்கு பதிலளிக்கும் வகையில், திரு மோடி பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.
"திரு எஸ். ரவி குமார் எஸ் மற்றும் திரு ராஜேஷ் வர்ரியர் ஆகியோருடன் ஒரு அருமையான சந்திப்பை மேற்கொண்டேன். எதிர்காலத் துறைகளில் காக்னிசென்ட் தொடர்ந்து பங்களிப்பதை இந்தியா வரவேற்கிறது. செயற்கை நுண்ணறிவு மற்றும் திறன் மேம்பாட்டில் நமது இளைஞர்கள் கொண்டுள்ள கவனம், வரவிருக்கும் துடிப்பான ஒத்துழைப்புக்கான களத்தை அமைக்கிறது."
***
(Release ID: 2201160)
SS/VK/PD
(வெளியீட்டு அடையாள எண்: 2212389)
வருகையாளர் எண்ணிக்கை : 25
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam