உள்துறை அமைச்சகம்
உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங்கின் பிறந்த தினத்தையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்
प्रविष्टि तिथि:
05 JAN 2026 1:14PM by PIB Chennai
உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங்கின் பிறந்த தினத்தையொட்டி மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித்ஷா அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நாட்டின் மீது தீவிர பக்தி கொண்ட தலைவரும் மதிப்பிற்குரியவருமான கல்யாண் சிங்கின் பிறந்ததினத்தில், தாம் அவருக்கு மரியாதை செலுத்துவதாக கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் குற்றம் காணப்படாத ஆட்சியின் அடையாளமாகத் திகழ்ந்த கல்யாண் சிங், நாட்டின் பாரம்பரியத்தையும் கலாச்சாரப் பெருமையையும் பாதுகாக்கும் கொள்கைகளில் ஒருபோதும் சமரசம் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார். தமது சித்தாந்த கொள்கைகளில் உறுதியாக நின்று, அவர் தனது அதிகாரத்தை துறந்தார் என்றும், மக்கள் நலனுக்காகவும், மக்களுக்குச் சேவை செய்வதற்காகவும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் தற்போதும் நினைவுகூரப்படுவதாகவும் கூறியுள்ளார்.
***
Release ID: 2211409
TV/IR/LDN/KR
(रिलीज़ आईडी: 2211467)
आगंतुक पटल : 85
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada