தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வேவ்ஸ் 2025 நிகழ்வை இந்தியா நடத்தியது; மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் முன்முயற்சியான இதில் 90-க்கும் அதிகமான நாடுகள் பங்கேற்றன

प्रविष्टि तिथि: 31 DEC 2025 8:54AM by PIB Chennai

இந்தியாவின் ஊடக மற்றும் பொழுபோக்குத்துறைக்கு ஆதரவாக மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் 2025-ல் பல முக்கியமான முன்முயற்சிகளை மேற்கொண்டது. இவற்றில் மிகப்பெரிய நிகழ்வாக உலக ஒலி ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சிமாநாடான வேவ்ஸ் 2025 அமைந்திருந்தது.

வேவ்ஸ் என்பது வெறுமனே ஒரு நிகழ்வல்ல, அது கலாச்சாரத்தின், படைப்பாக்கத்தின், உலகளாவிய தொடர்பின் அலையாகும் என்று பிரதமர் திரு மோடி வர்ணித்தார். பெரிதாக கனவு காணவும், கதைகளைக் கூறவும், உலகளாவிய படைப்பாளிகளை அது ஊக்கப்படுத்தியது. இந்தியாவின் விரிவான படைப்புச்சூழலில் ஈடுபடுத்திக்கொள்ள உலகளாவிய முதலீட்டாளர்களுக்கும், இளைஞர்களுக்கும் அழைப்பு விடுத்த பிரதமர், இந்தியாவில் உருவாக்குங்கள், உலகுக்காக உருவாக்குங்கள் என்ற இந்தியாவின் தொலைநோக்கு பார்வையை வலியுறுத்தினார்.

வேவ்ஸ் 2025 நிகழ்வில் 90-க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் அதிகமான பிரதிநிதிகள், 1000 படைப்பாளிகள், 300-க்கும் அதிகமான நிறுவனங்கள், 350-க்கும் அதிகமான புத்தொழில் நிறுவனங்கள் பங்கேற்றன. ஒலிபரப்பு, தகவல் பொழுதுபோக்கு, திரைப்படம், டிஜிட்டல் ஊடகம் உட்பட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 1 லட்சம் பார்வையாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

வேவ்ஸ் சந்தையில் 2025 ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் 12 பெரிய சர்வதேச நிகழ்வுகளும், 4 முக்கிய உள்நாட்டு தொழில்துறை நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன. இவற்றில் சுமார் 4334 கோடி ரூபாய் மதிப்புக்கு வணிகம் நடைபெற்றது. 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / விருப்பக் கடிதங்கள் கையெழுத்தாயின. சுமார் 9 ஆயிரம் நேரடி வணிக சந்திப்புகள் நடைபெற்றன.

கோவாவில் நடைபெற்ற 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் 81 நாடுகளைச் சேர்ந்த 240 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்தியாவின் முதலாவது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) திரைப்பட விழாவும் இதில் இடம்பெற்றது.

இந்திய சர்வதேச திரைப்பட விழாவுடன் இணைந்து நடத்தப்பட்ட வேவ்ஸ் திரைப்பட சந்தையில் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு உலகளாவிய பங்களிப்பு இருந்தது. இதில் 40-க்கும் அதிகமான நாடுகளில் இருந்து 2500-க்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2209982&reg=3&lang=1   

***

TV/SMB/RK/KR


(रिलीज़ आईडी: 2210080) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada