மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
தேர்வு குறித்த உரையாடல், மூன்று கோடிக்கும் அதிகமான பதிவுகளுடன் புதிய வரலாறு படைத்துள்ளது
प्रविष्टि तिथि:
31 DEC 2025 8:47AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் முக்கிய முன்முயற்சியான தேர்வு குறித்த உரையாடல் நிகழ்வுக்கு 2025, டிசம்பர் 30 நிலவரப்படி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடம் இருந்து மூன்று கோடிக்கும் அதிகமான பதிவுகள் பெறப்பட்டுள்ளன. இது வரலாற்று சிறப்புமிக்க மைல் கல்லை கடந்துள்ளது.
அபரிமிதமான இந்த வரவேற்பு நிகழ்ச்சியின் அதிகரித்து வரும் தேவையையும், மாணவர்களின் மனநலனை வெற்றிகரமாக கையாள்வதையும் பிரதிபலிக்கிறது. இந்த நிகழ்வு தேர்வுகள் குறித்து ஆக்கப்பூர்வமான, நம்பிக்கையான அணுகுமுறையை ஊக்கப்படுத்துகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்பு விகிதம் அதிகரித்து இருப்பது தேர்வு குறித்த உரையாடல் என்பது உண்மையான மக்கள் இயக்கமாக உருவாகியிருப்பதை காட்டுவதோடு, நாடுமுழுவதும் உள்ள கற்போர் மற்றும் கல்வியாளர்களிடையே ஆழமான பிரதிபலிப்பை காட்டுவதாக உள்ளது.
தேர்வு குறித்த உரையாடல் நிகழ்வுக்கான இணையவழிப் பதிவுகள் மைகவ் தளத்தில் 2025, டிசம்பர் 1 முதல் தொடங்கின. தேர்வு குறித்த உரையாடல் 2026-ல் பங்கேற்க விரும்புவோர் பதிவு செய்வதற்கான இணையதளம்: https://innovateindia1.mygov.in/
***
(Release ID: 2209981)
TV/SMB/RK/KR
(रिलीज़ आईडी: 2210079)
आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Urdu
,
Assamese
,
Bengali-TR
,
English
,
हिन्दी
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam