உள்துறை அமைச்சகம்
விடுதலைப் போராட்ட வீரர் ஷாஹீத் உத்தம் சிங்கின் பிறந்த தினத்தில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அவருக்கு மரியாதை
இடுகை இடப்பட்ட நாள்:
26 DEC 2025 11:25AM by PIB Chennai
விடுதலைப் போராட்ட வீரர் ஷாஹீத் உத்தம் சிங்கின் பிறந்த தினத்தில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப் பழிதீர்ப்பதில் ஷாஹீத் உத்தம்சிங் ஈடு இணையற்ற வீரத்தையும், துணிச்சலையும் வெளிப்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். கதர் இயக்கத்தின் மூலம் விடுதலை இயக்கத்தை வெளிநாடுகளுக்குப் பரப்புவதில் உத்தம் சிங் முக்கியப் பங்காற்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். உத்தம் சிங்கின் துணிச்சல்மிக்க வாழ்க்கை இளைஞர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் என்றும் தாய்நாட்டின் ஆழமான பற்றை உருவாக்கும் என்றும் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 2208717)
AD/PLM/KPG/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2208819)
வருகையாளர் எண்ணிக்கை : 47
இந்த வெளியீட்டை படிக்க:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Malayalam