பிரதமர் அலுவலகம்
டிசம்பர் 26 அன்று நடைபெறும் ‘வீர பாலகர் தினம் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்
प्रविष्टि तिथि:
25 DEC 2025 5:37PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் 2025 டிசம்பர் 26 அன்று, நண்பகல் 12:15 மணியளவில் நடைபெறும் ‘வீர பாலகர் தினம்’ தேசிய நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.
வீர பாலகர் தினத்தைக் குறிக்கும் வகையில், சாஹிப்சாதாக்களின் அசாதாரண துணிச்சல் மற்றும் உன்னத தியாகம் குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் நோக்குடனும், இந்திய வரலாற்றின் இளம் வீரர்களின் உறுதியான துணிச்சல், தியாகம் மற்றும் வீரத்தைப் போற்றி நினைவுகூரும் வகையிலும், மத்திய அரசு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நடவடிக்கைகளில் கதை சொல்லும் அமர்வுகள், கவிதை வாசிப்புகள், சுவரொட்டி தயாரித்தல் மற்றும் கட்டுரைப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் அடங்கும். இவை பள்ளிகள், குழந்தைகள் நல நிறுவனங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பிற கல்வித் தளங்களிலும், அத்துடன் மை கவ் மற்றும் மை பாரத் போன்ற இணையதளங்களில் ஆன்லைன் மூலமும் நடத்தப்படவுள்ளது.
2022 -ம் ஆண்டு ஜனவரி 9 அன்று, ஸ்ரீ குரு கோவிந்த் சிங் ஜி-யின் பிரகாஷ் புரப் அவரது மகன்களான சாஹிப்சாதா பாபா ஜோராவர் சிங் ஜி மற்றும் பாபா ஃபதே சிங் ஜி ஆகியோரின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், டிசம்பர் 26 -ம் தேதி வீர பாலகர் தினமாக கடைபிடிக்கப்படும் என்று பிரதமர் அறிவித்திருந்தார். அவர்களின் ஈடு இணையற்ற தியாகம் எதிர்காலத் தலைமுறைகளுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.
பிரதமரின் தேசிய பாலர் விருது பெற்றவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2208535®=3&lang=1
***
AD/SV/RK
(रिलीज़ आईडी: 2208601)
आगंतुक पटल : 33
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Marathi
,
Assamese
,
Bengali
,
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam