பிரதமர் அலுவலகம்
இந்தியாவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள், பொருளாதாரத்தை வலுப்படுத்துவது குறித்த கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
23 DEC 2025 2:58PM by PIB Chennai
இந்தியாவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் இப்போது வரி குறைப்புக்கு மட்டுமல்லாமல் அதற்கு அப்பால், பொருளாதாரத்தை வலுப்படுத்தி, பல லட்சக் கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி ஒரு பரந்த நோக்கத்தைக் கொண்டதாக அமைந்துள்ளன என்பதை விளக்கும் மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் எழுதிய கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஒரு வரலாற்று மைல்கல் என்றும், இது பெண்கள் தலைமையிலான முதல் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் என்றும் அமைச்சர் எடுத்துக்காட்டி இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். கிட்டத்தட்ட பேச்சுவார்த்தை குழு முழுவதிலும் பெண்கள் இருந்தனர் என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயலின் கட்டுரையைப் பகிர்ந்து, அதுதொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"இந்த நுண்ணறிவுமிக்க கட்டுரையில், மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல், இந்தியாவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள், இப்போது வரிக் குறைப்புகளுக்கு அப்பாற்பட்டவையாக இருக்கின்றன என்றும், பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் பல லட்சக் கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்குமான பரந்த நோக்கத்தைக் கொண்டுள்ளன என்றும் விளக்கியுள்ளார்.
இந்தியா-நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், ஒரு வரலாற்று மைல்கல் என்று அவர் எடுத்துக்காட்டியுள்ளார். ஏனெனில் இது பெண்கள் தலைமையிலான இந்தியாவின் முதல் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஆகும். கிட்டத்தட்ட முழு பேச்சுவார்த்தைக் குழுவும் பெண்களைக் கொண்டிருந்தது."
***
SS/PLM/SE
(रिलीज़ आईडी: 2207870)
आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam