தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
மத்திய அரசின் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்வதற்கான விரிவான நடவடிக்கைகள்
प्रविष्टि तिथि:
18 DEC 2025 12:44PM by PIB Chennai
தகவல் தொடர்பு மேம்பாடு மற்றும் தகவல் பரிமாற்றத் திட்டம் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம், மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை, மக்கள் அனைவரிடமும் கொண்டு செல்வதற்கு உதவிகரமாக அமைந்துள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் ஜம்மு காஷ்மீர் உட்பட நாடு முழுவதிலும் உள்ள கிராமப்புறங்கள், பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகள், தொலைதூர கிராமங்கள் மற்றும் நகரங்களில், அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய உதவுகிறது.
இந்த தகவல் பரிமாற்றத் திட்டத்தை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அதன் துணை நிறுவனங்களான மத்திய தகவல் அலுவலகம், பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் ஊடகப் பிரிவு ஆகியவற்றின் மூலம் அமல்படுத்தி வருகிறது.
தூய்மை இந்தியா இயக்கம், பிரதமரின் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித்திட்டங்கள், ஜல்ஜீவன் இயக்கம், பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதித்திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் மத்திய அரசின் ஊடகங்கள் வாயிலாக மக்களிடையே கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான செலவின விவரங்கள் மத்திய தகவல் அலுவலகத்தின் www.davp.nic.in. என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை திறம்பட மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில், நவீன மற்றும் பன்முகத்தளங்களில் தகவல் பரிமாற்றத்திற்கான உத்திசார் நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் நடப்பு நிதியாண்டில் திட்டங்கள் அனைத்தையும் டிஜிட்டல் முறையிலும், உள்ளூர் மக்களிடையே நேரடி செயல்பாடுகள் வாயிலாகவும் கொண்டு செல்ல பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இளைஞர்கள் மற்றும் குறிப்பிட்ட மக்களை சென்றடையச் செய்யும் வகையில், தகவல் பரிமாற்றத்திற்கான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு பல்வேறு டிஜிட்டல் தளங்கள் வாயிலாக விளம்பரங்களும் செய்யப்பட்டு வருகிறது. இதற்கென டிஜிட்டல் விளம்பரக் கொள்கை 2003-ஐ மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ள மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2205747®=3&lang=1
***
SS/SV/KPG/SE
(रिलीज़ आईडी: 2206160)
आगंतुक पटल : 8