பிரதமர் அலுவலகம்
மதுராவில் யமுனா விரைவுச்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு அறிவிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
16 DEC 2025 12:54PM by PIB Chennai
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் யமுனா விரைவுச்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரதமர் திரு. மோடி பிரார்த்தனை செய்துள்ளார்.
உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:
"உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் யமுனா விரைவுச்சாலையில் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிரிழப்புகள் மிகுந்த வேதனை அளிக்கிறது. அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் துயரத்தில் நானும் பங்கெடுக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ. 2 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்: பிரதமர் திரு @narendramodi"
***
AD/PKV/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2204814)
வருகையாளர் எண்ணிக்கை : 45
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam