உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2001 நாடாளுமன்றத் தாக்குதலின் போது வீரமரணம் அடைந்த பாதுகாப்புப் படை வீரர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அஞ்சலி செலுத்தினார்

प्रविष्टि तिथि: 13 DEC 2025 10:11AM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை  அமைச்சருமான திரு அமித் ஷா, நாடாளுமன்றத் தாக்குதலின் போது, பயங்கரவாதிகளுக்குப் பதிலடி கொடுத்து உயிர்த்தியாகம் செய்த பாதுகாப்புப் படையினருக்கு அஞ்சலி செலுத்தினார்.

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:

 "2001-ம் ஆண்டு உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் கோவிலான நமது நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலை முறியடித்த நமது பாதுகாப்புப் படையினரின் அசாத்தியமான துணிச்சலையும் வீரத்தையும் மீண்டும் நினைவுகூரும் நாள் இன்று. பயங்கரவாதிகளுக்குத் தகுந்த பதிலடியான இந்த தீரமிக்க வீரர்களின்  தியாகத்திற்கு இந்த நாடு என்றென்றும் கடமைப்பட்டிருக்கும்."

***

(Release ID: 2203399)

SS/PKV/RJ


(रिलीज़ आईडी: 2203432) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Marathi , Kannada , Malayalam , Bengali , Bengali-TR , Odia , English , Urdu , हिन्दी , Assamese , Punjabi , Gujarati