தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
பிரசார் பாரதி, ஏஐ இசைக்குழுவான திரிலோக்குடன் கூட்டு சேரவில்லை: மாநிலங்களவையில் இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் அறிவிப்பு
प्रविष्टि तिथि:
12 DEC 2025 2:53PM by PIB Chennai
ஆகாஷ்வாணி, தூர்தர்ஷன் அல்லது அதன் ஓடிடி தளமான வேவ்ஸ்-ல் உள்ளடக்கத்தை ஒளிபரப்புவதற்காக “திரிலோக்” என்ற செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய இசைக்குழுவுடன் பிரசார் பாரதி கூட்டு சேரவில்லை என்பதுடன் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் கூறியுள்ளார்.
மாநிலங்களவையில் திரு எஸ் நிரஞ்சன் ரெட்டி எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
இந்த ஆண்டு துர்கா நவராத்திரி விழாவின் போது வேவ்ஸ் ஓடிடி தளம் உட்பட, சில செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட பக்தி பாடல்கள் பிரசார் பாரதி நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்பட்டன. இது ஒரு சோதனை அடிப்படையில் எந்தவொரு பணப்பயனும் இன்றி ஒளிபரப்பப்பட்டது என அமைச்சர் கூறினார்.
****
SS/PKV/SH
(रिलीज़ आईडी: 2203371)
आगंतुक पटल : 7