உள்துறை அமைச்சகம்
முன்னாள் மத்திய அமைச்சர் சிவ்ராஜ் பாட்டீல் மறைவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
12 DEC 2025 10:37AM by PIB Chennai
முன்னாள் மத்திய அமைச்சர் சிவ்ராஜ் பாட்டீல் ஷாக்குர்கர் மறைவுக்கு மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், சிவ்ராஜ் பாட்டீல் மறைவு மிகவும் வருத்தம் அளிப்பதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். பல தசாப்தங்களாக பொது வாழ்வில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியவர் என்றும் பொது மக்கள் நலன் குறித்த ஆழ்ந்த ஞானம் கொண்டவராக அறியப்பட்டவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
***
(Release ID: 2202712)
SS/SV/KPG/KR
(रिलीज़ आईडी: 2202957)
आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam