தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்குமுறை வரைவு மசோதா தொடர்பான ஆலோசனைகளில் அரசு நம்பிக்கை: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன்

प्रविष्टि तिथि: 05 DEC 2025 1:47PM by PIB Chennai

ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்குமுறை வரைவு மசோதா - 2023 பொது தளத்தில் 10.11.2023 அன்று வெளியிடப்பட்டது. பொதுமக்களிடமிருந்தும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்தும் கருத்துகளும் பரிந்துரைகளும் 09.12.2023 வரை பெறப்பட்டன. பின்னர் அது 15.01.2024 வரை நீட்டிக்கப்பட்டது. ஊடகங்கள், பொழுதுபோக்கு துறையினர் உட்பட சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், கருத்து தெரிவிக்கும் காலத்தை அரசு 15.10.2024 வரை நீட்டித்தது.

அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் பெறப்பட்ட பரிந்துரைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அரசு பரந்த, விரிவான ஆலோசனைகளில் நம்பிக்கை கொண்டுள்ளது.

மாநிலங்களவையில், உறுப்பினர் திரு சாகேத் கோகலே எழுப்பிய நட்சத்திரக் குறியிடப்படாத கேள்விக்கு, தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் இன்று (05.12.2025) எழுத்து மூலம் அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

----

(Release ID: 2199310) 

SS/PLM/KPG/SH


(रिलीज़ आईडी: 2199626) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Bengali-TR , Kannada