உள்துறை அமைச்சகம்
தேசப்பற்றாளர் குதிரம் போஸின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா மரியாதை
प्रविष्टि तिथि:
03 DEC 2025 11:40AM by PIB Chennai
சிறந்த தேசப்பற்றாளரும், என்றும் நினைவு கூரப்படும் தியாகியுமான குதிரம் போஸ் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா மரியாதை செலுத்தியுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள திரு அமித் ஷா தாய் நாட்டிற்காக வீரம், துணிச்சல் மற்றும் தியாகத்தின் அடையாளமாக திகழ்ந்த குதிரம் போஸ் இந்தியத் தாய்நாட்டின் சுதந்திரத்திற்கான ஆயுதப்புரட்சிக்காக இளைஞர்களை ஒருங்கிணைத்தார் என்றும், சுதேசிக்காக நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார் என்றும் கூறியுள்ளார்.
எண்ணற்ற புரட்சியாளர்களால் ஈர்க்கப்பட்ட குதிரம் போஸ் அவர்களை, பிரிட்டிஷ் அரசால் புரட்சிப் பாதையிலிருந்து தடுக்க இயலவில்லை என்றும், மேலும் அவர் தாய்நாட்டிற்காக மகிழ்ச்சியுடன் தமது உயிரைத் தியாகம் செய்தார் என்றும் தெரிவித்துள்ளார். குதிரம் போஸின் வீர காவியம், ஒவ்வொரு இளைஞருக்கும் நாட்டை முன்னிலைப்படுத்துவதற்கான உத்வேகத்தின் விலைமதிப்பற்ற ஆதாரம் என்று திரு அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2198008®=3&lang=1
***
AD/IR/RK/KR
(रिलीज़ आईडी: 2198072)
आगंतुक पटल : 4