பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இலங்கை அதிபருடன் பிரதமர் தொலைபேசியில் உரையாடினார்

டிட்வா புயலால் இலங்கையில் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பேரழிவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

சரியான நேரத்தில் பயனுள்ள உதவிகளை வழங்கியதற்காக இந்தியாவிற்கு அதிபர் திரு திசநாயக்க தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்

प्रविष्टि तिथि: 01 DEC 2025 8:50PM by PIB Chennai

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தலைவர் திரு அனுர குமார திசநாயக்கவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார்.

டிட்வா புயலால் இலங்கையில் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பரவலான பேரழிவுக்குப் பிரதமர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். இந்த அவசர காலத்தில் இந்திய மக்கள், இலங்கை மக்களுடன் உறுதியான ஒற்றுமையுடனும் ஆதரவுடனும் துணை நிற்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

பேரிடரைத் தொடர்ந்து இந்தியா அளித்த  உதவிக்காக அதிபர் திரு  திசநாயக்க தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். மேலும் மீட்புக் குழுக்கள் மற்றும் நிவாரணப் பொருட்களை விரைவாக அனுப்பியதற்காக அவர் நன்றி தெரிவித்தார்.  சரியான நேரத்தில் பயனுள்ள உதவிகளை வழங்கியதற்காக  இந்தியாவிற்கு அதிபர் திரு திசநாயக்க தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும், தற்போது நடைபெற்று வரும் ஆபரேஷன் சாகர் பந்துவின் கீழ், துயரத்தில் உள்ளவர்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை  வழங்கும் என்றும் பிரதமர் திசநாயக்கவிடம் உறுதியளித்தார். மஹாசாகர் என்ற தொலைநோக்குப் பார்வை மற்றும் 'முதலில் ஆதரவளிக்கும் நாடு' என்ற அதன் நிலைப்பாட்டிற்கு ஏற்ப, இலங்கை மறுவாழ்வு முயற்சிகளை மேற்கொள்வது, பொது சேவைகளை மீண்டும் தொடங்குவது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதில் பணியாற்றுவது போன்றவற்றுக்கு இந்தியா வரும் நாட்களில் தேவையான அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு தொடர்ந்து வழங்கும் என்று அவர் உறுதியளித்தார்.

இரு தலைவர்களும் தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டனர்.

***

(Release ID: 2197275)

AD/RB/RK


(रिलीज़ आईडी: 2197578) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada