பிரதமர் அலுவலகம்
எல்லை பாதுகாப்புப் படை தினத்தையொட்டி அப்படை வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
01 DEC 2025 3:24PM by PIB Chennai
எல்லை பாதுகாப்புப் படை உருவான தினத்தையொட்டி, அப்படை வீர்ர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிப்பாடு, மிக முக்கிய பணி ஆகியவற்றின் அடையாளமாக எல்லைப் பாதுகாப்புப்படை திகழ்கிறது என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
சில முக்கிய சவால் மிக்க சூழல்களில் அவர்கள் பணியாற்றுவதாகவும் அத்துடன், அவர்களுடைய துணிச்சல் மனிதநேய பண்பு ஆகியவையும் மிகச் சிறப்பானது என்று திரு மோடி கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் குறிப்பிட்டிருப்பதாவது:
“எல்லைப் பாதுகாப்புப் படை உதய தினத்தையொட்டி, அப்படை வீர்ர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிப்பாடு, மிக முக்கிய பணி ஆகியவற்றின் அடையாளமாக எல்லைப் பாதுகாப்புப்படை திகழ்கிறது. அவர்களுடைய கடமையுணர்வு மிகச் சிறப்பானது, அவர்கள் சில முக்கியமான சவால்மிக்க சூழல்களில் பணியாற்றுகின்றனர். நமது நாட்டை பாதுகாக்கும் அப்படையினரின் சேவைக்கு எனது வாழ்த்துகள்”.
***
Release ID : (2196887)
SS/IR/LDN/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2197173)
வருகையாளர் எண்ணிக்கை : 101
இந்த வெளியீட்டை படிக்க:
Assamese
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada