இந்தி திரைப்படத் துறையில் அதிரடி காட்சிகளுக்கான பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு ஷோலே முன்னோடித் திரைப்படமாக இருந்தது: கிரண் சிப்பி
56 - வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், “ஷோலே திரைப்படத்தின் 50 ஆண்டுகள்: ஷோலே திரைப்படம் இன்னமும் ஏன் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது?” என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில், திரைப்பட வரலாற்றில், பார்வையாளர்களை ஒரு பரபரப்பான பயணத்திற்கு அழைத்துச் சென்ற விதம் குறித்து புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் ரமேஷ் சிப்பி விவரித்த விதம், திரைப்படங்களை பெரிதும் விரும்பிப் பார்ப்பவர்களை அன்றைய காலத்திற்குள் பின்னோக்கி கொண்டு செல்லும் வகையில் அமைந்திருந்தது.
அவரது மனைவியும், பல்துறை நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளருமான கிரண் சிப்பி நடத்திய இந்த அமர்வில், ரமேஷ் சிப்பி ஒரு கலாச்சார சாதனையாளராக மாறிய ஒரு திரைப்படத்தின் உருவாக்கம் குறித்த தனது நினைவுகள் , வெளிப்பாடுகள் மற்றும் மனமார்ந்த வாழ்த்துகள் நிறைந்திருந்தன.
திரைப்படங்களை விரும்புபவர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஷோலே திரைப்படத்தின் மறு வெளியீடு குறித்த அறிவிப்பு அமைந்திருந்தது.
1975 - ம் ஆண்டு நாட்டில் அவசரநிலை பிரகடனம் அமலில் இருந்த காலத்தில், இத்திரைப்படம் முதன்முதலில் வெளியிடப்பட்டபோது, அப்போதைய திரைப்படத் தணிக்கை வாரியம், தாக்கூர் பல்தேவ் சிங் தனது கூர்மையான முனைகளைக் கொண்ட காலணிகளைப் பயன்படுத்தி கப்பர் சிங்கைக் கொல்லும் இறுதிக்காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தது. ஒரு காவல் அதிகாரியின் பாத்திரத்தை பழிவாங்கும் நோக்குடன் சித்தரிக்கக்கூடாது என்று தணிக்கை வாரியம் வலியுறுத்தியது. இதன் காரணமாக, திரைப்பட தயாரிப்பாளரும் அவரது குழுவினரும் தயக்கத்துடன் இப்படத்தின் இறுதிக்காட்சியை மீண்டும் படமாக்க வேண்டியிருந்தது.
"தற்போது நீங்கள் இந்தத் திரைப்படத்தை, அது உருவாக்கப்பட்ட விதத்திலேய பார்ப்பீர்கள்," என்று சிப்பி மகிழ்ச்சியுடன் பார்வையாளர்களிடம் கூறினார். நீண்ட காலமாக தாமதமான தனது படைப்பின் பார்வை மீட்டெடுக்கப்பட்டுள்ளதைக் கொண்டாடினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2195492
***
SS/SV /KR
रिलीज़ आईडी:
2195740
| Visitor Counter:
5