மணிப்புரி ஆவணப்படமான 'பேட்டில்ஃபீல்ட்' இரண்டாம் உலகப் போரின் கதைகள் மற்றும் கற்பனைகளை உயிர்ப்பிக்கிறது
56-வது இந்திய சர்வதேச திரைப்படவிழா (ஐஃஎப்ஃஎப்ஐ), வலுவான, அர்த்தமுள்ள செய்திகளைக் கொண்ட பல்வேறு வகையான கதை அம்சம் இல்லாத படங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறது, இந்த ஆண்டு ஐஃஎப்ஃஎப்ஐ-ல் கவனத்தை ஈர்த்த கதை அம்சம் அல்லாத படங்களில் ஹம்சஃபர் (மராத்தி), பேட்டில்ஃபீல்ட் (மணிப்புரி) ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இன்று (24.11.2025) நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், இந்தப் படங்களின் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் தங்கள் படைப்புகளுக்குப் பின்னால் உள்ள கதைகளைப் பகிர்ந்து கொண்டனர்.
பேட்டில்ஃபீல்ட் திரைப்படம் முடிக்க கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் ஆனது என்று இயக்குநர் போருன் தோக்சோம் கூறினார். மணிப்பூர் மக்கள் இரண்டாம் உலகப் போரின் கதைகளைக் கேட்டு வளர்ந்திருப்பதாகவும், மணிப்பூர் இரண்டாம் உலகப் போரின் வரலாற்றில் ரத்தம் சிந்திய போர்க்களங்களில் ஒன்றாக இருந்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். ஒரு திரைப்பட இயக்குநராக, இந்த நினைவுகளை ஆவணப்படுத்தும் சவாலை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும் சரியான பதிவுகள் இல்லாத நிலையில், அந்தப் பகுதியின் முன்னோர்களின் கதையை நம்பகத்தன்மையுடனும் மரியாதையுடனும் சொல்வது தனது பொறுப்பு என்று அவர் நம்பினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2193830
***
AD/PKV/KPG/SE
रिलीज़ आईडी:
2195484
| Visitor Counter:
24