உலகின் திரைப்படப் படப்பிடிப்புத் தளமாக இந்தியா திகழும்-மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன்
இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவையொட்டி டோனா பாலாவில் தூதர்களின் வட்ட மேசை கூட்டம் நடைபெற்றது. இணைத் தயாரிப்பு வாய்ப்புகள், வலுவான கலாச்சாரப் பரிமாற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டதுடன் ஒலி, ஒளித் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புதிய வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. திரைப்படத் தயாரிப்பில் தொழில்நுட்ப கூட்டாண்மை உள்ளி்ட்டவற்றில் வளர்ந்து வரும் வாய்ப்புகள் தொடர்பாக இந்தியா மற்றும் கூட்டாண்மை நாடுகளுக்கிடையே உரையாடல் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன், ஒலி, ஒளித்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான மிகவும் சக்திவாய்ந்த வழி முறையாக இணைத்தயாரிப்பு திகழ்கிறது என்று தெரிவித்தார். 2025-ல் இந்தியாவின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத்துறை வளர்ச்சி 31.6 பில்லியன் டாலரை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். விஎஃப்எக்ஸ், அனிமேஷன் மற்றும் அடுத்தத் தலைமுறை தயாரிப்புத் தொழில்நுட்பம் மூலம் இது சாத்தியப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2192475
***
AD/IR/KPG/KR
रिलीज़ आईडी:
2195274
| Visitor Counter:
6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Gujarati
,
English
,
Urdu
,
हिन्दी
,
Konkani
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Telugu
,
Kannada
,
Malayalam