பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அரசியல் சாசன தினத்தையொட்டி இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களுக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

प्रविष्टि तिथि: 26 NOV 2025 10:01AM by PIB Chennai

அரசியல் சாசன தினத்தையொட்டி இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களுக்கு மரியாதை செலுத்தியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, அவர்களுடைய தொலைநோக்குப் பார்வை வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைப்பதின் கூட்டு முயற்சியில் நாட்டிற்கு தொடர்ந்து உத்வேகம் அளிப்பதாகக் கூறியுள்ளார்.

இந்திய அரசியல் சாசனம் மக்களுக்கான கண்ணியம், சமத்துவம் மற்றும் சுதந்திரத்திற்கு உயர்ந்த முக்கியத்துவம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். அரசியல் சாசனம் குடிமக்களுக்கு உரிமைகளை வழங்குவதுடன் அவர்களுடைய கடமைகளையும் அவர்களுக்கு நினைவூட்டுகிறது. அதை அவர்கள் நேர்மையுடனும், உறுதியுடனும் அவசியம் நிறைவேற்ற வேண்டும். இக்கடமைகள் வலுவான மற்றும் துடிப்புமிக்க ஜனநாயகத்தின் அடித்தளத்தை உருவாக்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய பிரதமர் மோடி, குடிமக்கள் தங்கள் நடவடிக்கைகள் மூலம் அரசியல் சாசன மாண்புகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் அதன் மூலம் நாட்டின் முன்னேற்றத்திற்கும் ஒற்றுமைக்கும் பங்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது:

“அரசியல் சாசன தினத்தன்று நாம் அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களுக்கு மரியாதை செலுத்துகிறோம். அவர்களுடைய தொலைநோக்குப் பார்வை வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைப்பதின் கூட்டு முயற்சியில் நாட்டிற்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது.

நமது அரசியல் சாசனம்  மக்களுக்கான கண்ணியம், சமத்துவம் மற்றும் சுதந்திரத்திற்கு மிக முக்கியத்துவம் அளிக்கிறது. இது நமக்கான  உரிமைகளுக்கு அதிகாரம் அளிப்பதுடன் குடிமக்களாக நமது கடமைகளையும் அது நினைவூட்டுகிறது.  நாம் அதை எப்போதும் நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும். இக்கடமைகள் வலுவான ஜனநாயகத்தின் அடித்தளமாகும்.  நமது நடவடிக்கைகள் மூலம் அரசியல் சாசன மாண்புகளை வலுப்படுத்துவதற்கு நமது  உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவோம்.”

***

(Release ID: 2194460

SS/IR/KPG/KR


(रिलीज़ आईडी: 2194558) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Gujarati , Telugu , Kannada , Malayalam