பிரதமர் அலுவலகம்
பிரதமர் நவம்பர் 25 அன்று குருக்ஷேத்ரா செல்கிறார்
Posted On:
24 NOV 2025 12:37PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி ஹரியானாவின் குருக்ஷேத்ராவிற்கு நவம்பர் 25 அன்று செல்கிறார். மாலை 4 மணியளவில் பகவான் கிருஷ்ணரின் புனித சங்கின் நினைவாக புதிதாக கட்டப்பட்ட 'பஞ்சஜன்யா'-வை பிரதமர் திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து, மகாபாரத அனுபவ மையத்தைப் பார்வையிடுகிறார். இது மகாபாரதத்தின் குறிப்பிடத்தக்க அத்தியாயங்களை சித்தரிக்கக்கூடியதாகும். அதன் கலாச்சார மற்றும் ஆன்மீக மகத்துவத்தை எடுத்துக்காட்டுவதாகும்.
மாலை 4-30 மணியளவில் சீக்கியர்களின் 9-வது குருவாக மதிக்கப்படும் ஸ்ரீ குரு தேக்பகதூரின் 350-வது தியாக தினத்தை ஒட்டி நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்க உள்ளார். அப்போது அவர் குருவின் 350-வது தியாக தினத்தை குறிக்கும் சிறப்பு நாணயத்தையும், அஞ்சல் தலையையும் வெளியிட்டு உரையாற்ற உள்ளார்.
குரு தேக்பகதூரின் 350-வது தியாக தினத்தை கௌரவிக்கும் வகையில், மத்திய அரசு ஓராண்டு காலத்திற்கு இதை கடைபிடிக்கிறது.
அதைத்தொடர்ந்து மாலை 5-45 மணியளவில், ஸ்ரீமத் பகவத் கீதையின் தெய்வீக வெளிப்பாட்டுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் நாட்டின் மிகவும் புனிதமான யாத்திரைத் தலங்களில் ஒன்றான பிரம்ம நதியில் பிரதமர் தரிசனம் செய்து, பூஜையில் ஈடுபட உள்ளார்.
இந்தப் பயணம் குருக்ஷேத்ராவில் நவம்பர் 15 அன்று தொடங்கி டிசம்பர் 5 வரை நடைபெறும் சர்வதேச கீதை திருவிழாவோடு ஒத்துப்போகிறது.
***
(Release ID: 2193441)
SS/IR/LDN/RK
(Release ID: 2193565)
Visitor Counter : 10
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Kannada
,
Malayalam