இளம் படைப்பாளர்கள் திரைப்படங்களைத் தயாரிப்பதுடன் நாட்டின் எதிர்கால படைப்பாளர்களாகவும் உருவெடுத்து வருவதாக மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார்
இளம் படைப்பாளர்கள் திரைப்படங்களைத் தயாரிப்பதுடன் எதிர்காலத்தில் நாட்டின் சிறந்த படைப்பாளர்களாகவும் உருவெடுத்து வருவதாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார். கோவாவில் எதிர்காலத்திற்கான படைப்பாற்றல் சிந்தனைகள் என்ற அமைப்பின் நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்து பேசினார்.
கடற்கரை நகரமான கோவாவில் இந்தியாவின் திறன் வாய்ந்த இளம் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தங்களது திறமையை வெளிக்காட்டும் தளமாக உருவெடுத்துள்ளது என்று அவர் கூறினார். 48 மணி நேரத்திற்குள் திரைப்படத்தைத் தயாரிப்பதற்கான சவாலில் 125 இளம் நட்சத்திரங்கள் பங்கு பெற்று தங்களது திறனை வெளிப்படுத்தியதாக அவர் கூறினார். திரைக்கதையாக எழுதப்பட்ட கருத்துருக்களை திரைப்படமாக உருவாக்குவதில் படைப்பாற்றல், ஒருங்கிணைப்பு மற்றும் திரைப்படத்திற்கான ஜாலங்களுடன் உருவாக்குவது என்பது சவாலானது என்று அவர் கூறினார். எதிர்கால இயக்குநர்கள், நடிகர்கள், கதாசிரியர்கள் போன்ற பல்வேறு நபர்களுக்கு இது ஒரு தளமாக அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
திரைப்படத்துறையை மேம்படுத்துவதற்கென மத்திய அரசு மேற்காண்டு வரும் பல்வேறு முன் முயற்சிகளை சுட்டிக்காட்டிய அவர், மும்பையில் இந்திய படைப்பாற்றல் தொழில்நுட்ப நிறுவனம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளதையும் எடுத்துரைத்தார். இதன் மூலம் இளம் திறமையாளர்கள் தங்களது திறனை வடிவமைத்துக் கொள்ளவும், இந்தியாவில் படைப்பாற்றல் திறனை வலுப்படுத்துவதற்கும் இத்துறையில் உள்ள பொருளாதார வாய்ப்புகளுக்கு உத்வேகம் அளிப்பதற்கும் இது உதவிடும் என்றும் டாக்டர் எல் முருகன் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2192453
***
AD/SV/KPG/KR
Release ID:
2192596
| Visitor Counter:
7