உலக அளவில் திரைப்படத்துறைச் சார்ந்த நிபுணர்களின் விவாத அமர்வுகளை மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் கோவாவில் இன்று தொடங்கி வைத்தார்.
பெண்கள் தலைமையிலான திரைப்படம் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் சிறப்புக் கவனம் செலுத்தும் வகையில் உலக அளவில் துறைசார்ந்த நிபுணர்களின் விவாத அமர்வுகளை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் கோவாவில் இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தத் திரைப்படத் திருவிழாவில் 200-க்கும் அதிகமான திரைப்படங்கள், திரையிடுவதைச் சுட்டிக்காட்டினார். இது உலக அளவில் இந்தியாவின் வளர்ந்து வரும் திரைப்படத்துறையின் தாக்கத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளதென்று அவர் கூறினார். வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகளை எட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் இந்த விழா அமைந்துள்ளது என்று கூறினார். உலக அளவில் இந்தியாவில் வளர்ந்து வரும் படைப்பாற்றல் திறனுக்கு சான்றாக இந்த விழா அமைந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். இந்த விழாவில் 50-க்கும் மேற்பட்ட பெண் இயக்குநர்கள் இயக்கிய திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளதன் மூலம் இத்துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.
கோவாவில் கலா அகாடமியில் நடைபெற்று வரும் 56-வது இந்திய சர்வதேச திரைப்படத் விழாவில் இத்துறை சார்ந்த நிபுணத்துவம் கொண்ட பிரபலமானவர்களின் ஆய்வுகள் மற்றும் கருத்துக்கள் குறித்த விவாதங்களின் தொகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறைச் செயலர் திரு சஞ்சய் ஜாஜூ, இணைச் செயலாளர் டாக்டர் அஜய் நாகபூஷன், தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண் இயக்குநர் திரு பிரகாஸ் நக்தும், திரைப்படத் தயாரிப்பாளர் திரு முசாஃபர் அலி மற்றும் திரைப்படத்துறையில் பிரபலமான திரு ரவி கொட்டாரக்காரா ஆகியோர் கலந்து கொண்டனர்
திரைப்படத்துறையைச் சார்ந்த பல்வேறு விவாதங்கள் அடங்கிய இந்த ஆண்டுக்கான தொகுப்பு முதன் முறையாக பொதுமக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியாக நடைபெற்றது. இது திரைப்படத் திருவிழா குறித்த ஆர்வத்தை அதிக எண்ணிக்கையிலான மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் அமைந்திருந்தது.
இந்த நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியா, ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளின் திரைப்படத்துறைச் சார்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2192439
***
AD/SV/KPG/KR
Release ID:
2192570
| Visitor Counter:
11
Read this release in:
English
,
Khasi
,
Urdu
,
Marathi
,
Nepali
,
Konkani
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam