56-வது ஐஎஃப்எஃப்ஐ விழாவில் போர்த்துகீசிய திரைப்படமான 'தி ப்ளூ டிரெயில்' துவக்க திரைப்படமாகத் திரையிடப்பட்டது
கேப்ரியல் மஸ்காரோ எழுதி, இயக்கிய போர்த்துகீசிய திரைப்படமான ‘தி ப்ளூ டிரெயில்’, இன்று 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (ஐஎஃப்எஃப்ஐ) துவக்க திரைப்படமாகத் திரையிடப்பட்டது. விழாவின் முதல் படம், பரவலான பாராட்டைத் தூண்டும் வகையில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
படம் திரையிடப்படுவதற்கு முன், மரியா அலெஜான்ட்ரா ரோஜாஸ், ஆர்டுரோ சலாசர் ஆர்பி, கிளாரிசா பின்ஹெய்ரோ, ரோசா மலாகுடா மற்றும் கேப்ரியல் மஸ்காரோ உள்ளிட்ட படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர் சிவப்பு கம்பள நிகழ்வில் கலந்து கொண்டனர். மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன், கோவா முதலமைச்சர் திரு பிரமோத் சாவந்த், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறைச் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு, ஐஎஃப்எஃப்ஐ இயக்குநர் திரு சேகர் கபூர் மற்றும் பழம்பெரும் நடிகர் திரு நந்தமுரி பாலகிருஷ்ணா ஆகியோர் கலந்துரையாடல் நிகழ்வின்போது உடனிருந்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய திரு சேகர் கபூர், இந்திய சர்வதேச திரைப்பட விழா மீதான தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். மேலும் இரண்டு, மூன்று ஆண்டுகளில் 1,00,000 பேர் இந்த நிகழ்ச்சிக்கு வரக்கூடும் என்றும், மிக விரைவில் கேன்ஸ் விழாவைப் போல இந்த விழா புகழ் பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
‘தி ப்ளூ டிரெயில்’ திரைப்படத்தின் முதல் காட்சி பலத்த கரகோஷத்துடன் வரவேற்கப்பட்டது. வாழ்க்கையின் சோதனைகளை உணர்வுப்பூர்வமாக ஆராய்வதற்கும், மீள்தன்மையின் அமைதியான கொண்டாட்டத்திற்கும், தெரசா கதாப்பாத்திரம் மிகவும் துணிச்சலுடன் மேற்கொள்ளும் சுய கண்டுபிடிப்பின் பிரகாசமான பயணத்தையும் பார்வையாளர்கள் பாராட்டினர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2192321
(Release ID: 2192321)
***
SS/BR/SH
Release ID:
2192364
| Visitor Counter:
8