பிரதமர் அலுவலகம்
தில்லி சம்பவத்தை தொடர்ந்து பூடானின் ஒருமைப்பாட்டுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
11 NOV 2025 3:01PM by PIB Chennai
பூடான் 4-வது மன்னரின் 70-வது பிறந்தநாள் நிகழ்ச்சியின் போது, இந்தியாவுடன் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியதற்காக பூடான் மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார். தில்லியில் ஏற்பட்ட சோக சம்பவத்தையடுத்து அதில் பாதிக்கப்பட்டோருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பூடான் மக்கள் தனித்துவ பிரார்த்தனை செய்தனர். கருணை மற்றும் ஒற்றுமையின் அடையாளமான இந்த நிகழ்வை அங்கீகரித்த பிரதமர், இந்த உணர்வை தான் ஒருபோதும் மறக்க மாட்டேன் என்றார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில அவர் எழுதியிருப்பதாவது:
“தில்லி கார் வெடிப்பு சம்பவத்தையடுத்து இந்திய மக்களுடன் தங்களின் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த, 4-வது மன்னரின் 70-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் பூடான் மக்கள் தனித்துவ வழிபாடு செய்தனர். இந்த உணர்வை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்.”
***
(Release ID: 2188751)
SS/SMB/KPG/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2188841)
வருகையாளர் எண்ணிக்கை : 36
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam