பிரதமர் அலுவலகம்
பிரதமர் தமது சத்தீஸ்கர் பயணக் காட்சிகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்
Posted On:
01 NOV 2025 9:06PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தமது சத்தீஸ்கர் பயணக் காட்சிகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் தமது தொடர்ச்சியான பதிவுகளில், நயா ராய்ப்பூர் அடல் நகரில் மக்கள் சந்திப்பின் போது அவர்கள் காட்டிய அன்புக்கும், ஆர்வத்துக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
நயா ராய்ப்பூர் அடல் நகரில் சத்தீஸ்கர் சட்டப்பேரவை கட்டடத்தை தொடங்கிவைத்தது தமக்கு பெருமை அளிக்கிறது என்று திரு மோடி கூறியுள்ளார். பசுமை கட்டுமான கோட்பாட்டில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய வளாகம் சூரிய சக்தியில் இயங்குவது மட்டுமின்றி மழைநீர் சேகரிப்பையும் கொண்டுள்ளது.
நயா ராய்ப்பூர் அடல் நகரில் முன்னாள் பிரதமர், பாரத ரத்னா
திரு அடல் பிகாரி வாஜ்பாயின் சிலையையும் பிரதமர் திறந்துவைத்தார். இந்தச்சிலை பல தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியின் போது, தாயின் பெயரால் ஒரு மரக்கன்று நடும் இயக்கத்திலும் அவர் பங்கேற்றார்.
நயா ராய்ப்பூரில் உள்ள ஸ்ரீசத்யசாய் சஞ்சீவனி மருத்துவமனையில் நோயாளிகளுடன் உரையாடியதை பகிர்ந்து கொண்ட பிரதமர், இது மிகவும் தனித்துவமானது, மனதை நெகிழச்செய்வது என்று தெரிவித்தார். பிறவியிலேயே இதய நோயால் பாதிக்கப்பட்டு வெற்றிகரமாக மீண்டுவந்த குழந்தைகளை சந்திக்கும் வாய்ப்பையும், அவர் பெற்றார். அவர்களின் உற்சாகமும், நேர்மறை எண்ணமும் அவருக்கு புதிய சக்தியை அளித்தது என்றார்.
புதிய சட்டப்பேரவை கட்டடத்தின் திறப்பு விழாவில் மக்களின் பெருமளவிலான பங்களிப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த திரு மோடி, அவர்களின் உற்சாகம், சத்தீஸ்கரின் 25-வது அமைப்பு தின கொண்டாட்ட உணர்வை அதிகப்படுத்தியுள்ளது என்றும் கூறினார்.
நயா ராய்ப்பூர் அடல் நகரில் உள்ள பிரம்ம குமாரிகள் தியான மையமான சாந்தி ஷிகார் தொடக்கம் பற்றி பிரதமர் குறிப்பிட்டார். இந்த மையம் நவீனம் மற்றும் ஆன்மிகத்தை பிரதிபலிக்கிறது என்று கூறிய அவர், தியானம், தன்னை உணர்தல், உலக அமைதி ஆகியவற்றுக்கு குறிப்பிடத்தக்க மையமாக இந்த மையம் உருவாகும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
***
(Release ID: 2185341)
SS/SMB/AG/RK
(Release ID: 2188778)
Visitor Counter : 8
Read this release in:
Telugu
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada